Aug 17, 2026 - 04:28 PM



செலிங்கோ லைஃப் நிறுவனம், 2026 ஜூன் 30ஆம் திகதியளவில் அதன் மொத்த சொத்து பெறுமதி ரூ. 300 பில்லியன் என்ற முக்கிய மைல்கல்லைத் தாண்டி, ரூ. 302.5 பில்லியனை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி வேகத்தையும் வலுவான நிதி நிலைத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் சொத்துக்களின் பெறுமதி ரூ. 15.65 பில்லியனால் அதிகரித்துள்ளது. இது 5.45 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், மாதத்திற்கு சராசரியாக ரூ. 2.58 பில்லியன் அளவிலான சொத்து வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், 2026 ஜூன் 30ஆம் திகதியளவில், நிறுவனத்தின் இடர் அடிப்படையிலான மூலதன போதுமை விகிதம் (Risk-Based Capital Adequacy Ratio - CAR) 406 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது, காப்புறுதி துறையின் ஒழுங்குமுறை அமைப்பு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச 120 சதவீத கட்டாய அளவை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.இந்த வலுவான மூலதன நிலை, செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விவேகமான இடர் முகாமைத்துவ நடைமுறைகள், உறுதியான நிதி நிர்வாகம் மற்றும் காப்புறுதிதாரர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அதேவேளை, பேரினப் பொருளார அளவிலான அழுத்தங்கள் மற்றும் சந்தை ஏற்றத் தாழ்வுகளைத் தாங்கிக்கொள்ளும் உயர்ந்த திறனையும் இது வெளிப்படுத்துகிறது.
இந்த சாதனை தொடர்பாக செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் கருத்து தெரிவிக்கையில், ரூ. 300 பில்லியன் சொத்து பெறுமதி என்ற மைல்கல்லைத் தாண்டியிருப்பது, செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் வலிமை, நிலைத்தன்மை மற்றும் ஒழுக்கமான வளர்ச்சிக்கு கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க அங்கீகாரமாகும். ஒழுங்குமுறைத் தேவைகளை விட கணிசமாக அதிகமாக உள்ள எமது வலுவான மூலதனப் போதுமை விகிதம், இடர் முகாமைத்துவத்தில் நாம் கடைப்பிடிக்கும் விவேகமான அணுகுமுறையையும், காப்புறுதிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் எமக்குள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த வலுவான நிதி அடித்தளம், பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள எமக்கு வலிமை அளிப்பதுடன், அனைத்து பங்குதாரர்களுக்கும் நீண்டகால பெறுமதியைத் தொடர்ந்து வழங்குவதற்கும் எம்மை நிலைநிறுத்துகிறது.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் சொத்து அடித்தளம், அதன் வளர்ந்து வரும் நில ஆதன முதலீடுகள் உள்ளிட்ட நிதி முதலீடுகளால் முதன்மையாக இயக்கப்படுகிறது. இது நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பின் தரத்தையும் நிலைத்தன்மையையும் மேலும் வலுப்படுத்துகிறது.நிறுவனம் தனது கிளை வலையமைப்பிற்காக நிலங்களை கையகப்படுத்துவதில் தொடர்ந்து மூலோபாய ரீதியாக முதலீடு செய்து வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைக் கட்டிடங்களை உருவாக்குவதுடன், தனது சொத்து முதலீட்டுத் தொகுப்பின் வலிமையையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தி வருகிறது. தற்போது,செலிங்கோ லைஃப் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில், நிறுவனத்தின் 36ஆவது கிளைக் கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியானது, 2025ஆம் ஆண்டில் பதிவு செய்த வலுவான செயல்திறன் அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் நிறுவனம் தொடர்ந்து 22ஆவது ஆண்டாக சந்தை முன்னணி நிலையைப் பதிவு செய்தது.
2026 SLIM காந்தார் மக்களின் விருதுகள் (2026 SLIM Kantar People’s Awards) விருது வழங்கும் விழாவில், தொடர்ந்து 20-வது ஆண்டாக ஆண்டின் மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் என்ற விருதை முன்னெப்போதும் இல்லாத வகையில் வென்றுள்ள World Finance, றுழசடன குiயெnஉந நிறுவனத்தால் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் செலிங்கோ லைஃப் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. காப்புறுதிதாரர்களின் இலட்சியங்களைப் பாதுகாத்து, அவற்றுடன் தொடர்புடைய இடர்களைக் குறைக்கும் வகையில், நிறுவனம் புதுமையான காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகிறது.

























