Aug 17, 2026 - 07:36 PM



பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் செல்லுபடியாகும்.
குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பமானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படலாம்.
இன்று (17) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளைய தினத்திற்குச் செல்லுபடியாகும்.

























