Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளருக்கு கட்டாய விடுமுறை

Aug 17, 2026 - 08:22 PM

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளருக்கு கட்டாய விடுமுறை
Mobitel Inner 1278

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அந்த அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பளத்துடனான இந்த கட்டாய விடுமுறைக் காலத்தில், அதிகாரசபையின் அலுவலகம் அல்லது பணித்தளங்களுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தலைவரின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொது முகாமையாளர் நிறுவனக் கோவை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஒழுக்க நெறிமுறைகளை மீறி பல கடுமையான துஷ்பிரயோகங்களைச் செய்துள்ளமை முதற்கட்டமாக வெளிப்பட்டுள்ளமையே இத்தீர்மானத்திற்குக் காரணம் என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத தெரிவித்தார்.


MOST READ

காணொளி
ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

Mobitel 1278