Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் - வௌியான முக்கிய அறிவிப்பு

Aug 18, 2026 - 02:21 PM

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் - வௌியான முக்கிய அறிவிப்பு
Mobitel Inner 1278

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

 

அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

அடிப்படைத் தகுதிகள்:

 

2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.

 

க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.

 

பொதுச் சாதாரண பரீட்சையில் (Common General Test) குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) வயது 25க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் - கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக 129க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

Mobitel 1278