Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த யூனியன் பிளேஸில் புதிய வணிக மையத்தை SDB வங்கி திறந்து வைத்துள்ளது

Aug 18, 2026 - 03:20 PM

நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த யூனியன் பிளேஸில் புதிய வணிக மையத்தை SDB வங்கி திறந்து வைத்துள்ளது
Mobitel Inner 1278
EDEX Inner

கொழும்பின் மிக முக்கியமான வணிகப் பகுதிகளில் ஒன்றில், 167, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 என்ற முகவரியில் தனது புதிய வணிக மையத்தைத் திறந்து வைத்துள்ளதன் மூலம், வணிக வங்கிச் சேவைக்கான தனது இருப்பை SDB வங்கி வலுப்படுத்தியுள்ளது. இந்த இடமாற்றமானது, விசேட நிதித் தீர்வுகளை வழங்குதல், நிறுவன வாடிக்கையாளர்களுடனான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் வணிகங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் செல்வந்த வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றில் வங்கியின் தொடர்ச்சியான கவனத்தை வெளிப்படுத்துகிறது. 

கொழும்பின் வணிக மையப் பகுதியில் அமைந்துள்ள SDB வங்கியின் இந்தப் புதிய வணிக மையமானது, நிறுவனங்களில் தீர்மானங்களை மேற்கொள்கின்றவர்கள், நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள், நிறுவன ரீதியான வாடிக்கையாளர்கள் மற்றும் வசதி படைத்த தனிநபர்களுக்கு வங்கியை இன்னும் நெருக்கமாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமாக, இந்த வணிக மையத்தை ஒரு தளமாகப் பயன்படுத்தி, சமூக மேம்பாடு, தொழில்முயற்சியாளர் வளர்ச்சி மற்றும் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் முதலீடுகளை திசைதிருப்புவதன் மூலம், மேற்கூறிய தரப்பினரை இலங்கையின் தேசிய அபிவிருத்தியுடன் அர்த்தமுள்ள வகையில் இணைக்க SDB வங்கி திட்டமிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த அமைவிடமானது, இலங்கையின் வணிகச் சமூகத்துடனான ஆழமான தொடர்பிற்கு உதவுவதோடு, வங்கியின் நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவை வரிசையை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வணிகங்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட, விரிவான மற்றும் பிரத்தியேகமான வங்கித் தீர்வுகளை இவ்வணிக மையம் வழங்குகிறது. இதில் பிரத்தியேகமான கடன் மற்றும் வைப்பு வசதிகள், பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை முகாமைத்துவம், குறுகிய கால முதலீடு மற்றும் பணச் சந்தைத் தீர்வுகள், மற்றும் வணிகங்கள் தங்கள் நிதிச் செயல்பாடுகளை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் பிரத்தியேக டிஜிட்டல் வங்கித் தீர்வுகள் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு வணிகத்தின் தனித்துவமான தேவைகளையும் புரிந்துகொள்ளும் அனுபவமிக்க வங்கி வல்லுநர்களால் வழங்கப்படும் பிரத்தியேகமான ஆலோசனை சேவைகளாலும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். 

நிறுவன வங்கிச்சேவை உறவுகளை வலுப்படுத்துவதைத் தாண்டி, இந்த புதிய இடம், சுற்றியுள்ள வணிக மாவட்டத்தில் உள்ள தொழில் வல்லுநர்கள், பெரும் வசதி படைத்த வாடிக்கையாளர் பிரிவினர் மற்றும் வளர்ந்து வரும் வணிக சமூகத்திற்கு SDB வங்கி சிறப்பாகச் சேவையாற்ற உதவுகிறது. மேலும், பிரத்தியேக வணிக மேம்பாட்டு முயற்சிகள், டிஜிட்டல் வங்கிச் சேவையைப் பயன்படுத்துதல் மற்றும் நீண்ட கால வணிக வளர்ச்சிக்கு உதவும் ஒருங்கிணைந்த நிதித் தீர்வுகள் மூலம் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தவும் வங்கி திட்டமிட்டுள்ளது. 

இந்தத் திறப்பு விழா குறித்து கருத்து தெரிவித்த SDB வங்கியின் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஜ் அக்மீமன அவர்கள், “யூனியன் பிளேஸில் SDB வணிக மையத்தைத் திறந்து வைப்பது, எங்களின் வணிக வங்கிச் சேவைகளை வலுப்படுத்துவதிலும், எங்களின் நிபுணத்துவத்தை இலங்கையின் நிறுவன சமூகத்திற்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகிறது. பிரத்தியேகமான வாடிக்கையாளர் சேவை முகாமைத்துவம், தேவைக்கேற்ற நிதித் தீர்வுகள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், அனைத்து அளவிலான வணிகங்களும் நிலைபேறான வளர்ச்சியை அடைவதற்கும், அதேவேளையில் நம்பிக்கை, எளிதான அணுகல் மற்றும் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நீண்டகால வங்கிச்சேவை உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கும் ஆதரவளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம். இந்த வணிக மையம் எங்களின் இலட்சியம், சிறப்பான சேவையை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழட்டும், என்று கூறினார். 

SDB வணிக மையத்தின் திறப்பு நிகழ்வானது, இலங்கையின் நிறுவன மற்றும் வணிகத் துறையின் மாறிவரும் நிதித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதோடு, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கிச் சேவைகளை வழங்குவதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. 

SDB வங்கி தொடர்பான விபரங்கள்: 

ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும், எதிர்காலத்திற்குத் தயாரான வங்கியான SDB வங்கி, இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட உரிமம் பெற்ற ஒரு விசேட வங்கியாகும். இது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் Fitch Ratings-ஆல் BB+(lka) எனக் கடன் தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய தனது 93 கிளைகளின் வலையமைப்பு மூலம், இந்த வங்கி நாடு முழுவதும் உள்ள தனது தனிநபர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை வழங்குகிறது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகம் சார்ந்த கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன. நிலைபேறான நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்களையும் வணிகங்களையும் மேம்படுத்துவதில் இது உறுதியான கவனம் செலுத்துகிறது. இலங்கையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில், பெண்களுக்கு வலுவூட்டு;தல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலைபேறான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் இந்த வங்கி குறிப்பாக அர்ப்பணிப்புடன் உள்ளது.


MOST READ

காணொளி
சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

Mobitel 1278