Aug 18, 2026 - 02:54 PM





உலகின் மாபெரும் pizza வர்த்தக நாமமான Domino’s, இலங்கையில் தனது 15 வருட பூர்த்தியை, நீண்ட pizza உடன் கொண்டாடியது. இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில் ஊழியர்கள் மற்றும் பங்காளர்களை ஒன்றிணைத்திருந்தது.
2011 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரவேசித்தது முதல், Domino’s இனால் சுமார் இரண்டு மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கொண்டாட்டங்கள், குடும்ப நிகழ்வுகள், இரவு உணவு தேடல்கள் மற்றும் தினசரி முக்கிய தருணங்களில் பங்கேற்றுள்ளது.
இந்தப் பயணம் தொடர்பில் Domino’s ஸ்ரீ லங்காவின் தலைமை அதிகாரி ஷயனா செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “Domino’s இன் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் எமது 15 வருட நிறைவைக் கொண்டாட நாங்கள் விரும்பினோம். நாங்கள் வெறும் வரலாற்றைக் கொண்டாட விரும்பவில்லை; ஒரு புதிய வரலாற்றைப் படைக்கவே விரும்பினோம். எமது ஊழியர்களுடன் இணைந்து இந்த extraordinary pizza ஐ உருவாக்கியமையானது, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிப்பதற்கு மிகப்பொருத்தமான வழியாக அமைந்தது” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச வர்த்தக நாமம் எனும் வகையில், Domino’s உலகளாவிய வலையமைப்புடன் இணைத்து, தரம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றுடன், இலங்கையின் வாடிக்கையாளர்கள் பற்றிய ஆழமான புரிதலுடன் நாம் நீண்ட தூரம் பயணித்துள்ளோம் என்றார்.
கடந்த பல ஆண்டுகளாக, Domino’s Sri Lanka உள்ளூர் நுகர்வோரின் மாறுபடும் விருப்பங்களுக்கு ஏற்ப தனது தயாரிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வந்துள்ளது. தனது முதன்மையான pizza வகைகளுக்கு அப்பால், சோறு சார்ந்த உணவுகள் மற்றும் பர்கர்கள் போன்ற தயாரிப்புகளிலும் இந்நிறுவனம் தடம் பதித்துள்ளது. உள்ளூர் நுகர்வோரை மையமாகக் கொண்ட புதுமைகளை அறிமுகப்படுத்துவதிலும், வாடிக்கையாளர்கள் Domino’s ஐத் தேர்ந்தெடுப்பதற்கான கூடுதல் சந்தர்ப்பங்களை உருவாக்குவதிலும் இது அதிக கவனம் செலுத்தி வருகிறது.
வரலாறு படைத்த இந்த pizza, சமையல் கலைநிபுணர் நாலக மஹவத்த மற்றும் சுரங்க பெரேரா தலைமையிலான Domino’s இன் உணவக செயற்பாட்டுக் குழுவினரால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டுநிறைவு முயற்சியைச் செயல்படுத்துவதற்காக நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குழுக்களையும் இது ஒன்றிணைத்தது. இலங்கையில் நிறுவனத்தைத் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தவும் வர்த்தக நாமத்தின் தரத்தை உயர்த்தவும் வழிநடத்திய Domino’s ஸ்ரீ லங்காவின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான விஜய பாஸ்கரின் தலைமையும் ஆதரவும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டன.
2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளிலுமே சிறந்த ஒட்டுமொத்த செயற்பாட்டிற்கான மதிப்புமிக்க Golden Franny விருதைப் பெற்ற Domino’s ஸ்ரீ லங்காவிற்கு, இந்த ஆண்டுநிறைவானது மற்றொரு குறிப்பிடத்தக்க காலப்பகுதியைத் தொடர்ந்து அமைந்துள்ளது. இந்த அங்கீகாரமானது, இந்த உலகளாவிய கௌரவத்தைப் பெற்ற முதலாவது தென்னாசியச் சந்தையாக Domino’s ஸ்ரீ லங்காவை மாற்றியுள்ளது.
தனது 15 ஆண்டுகாலப் பயணத்தைக் கட்டியெழுப்பும் வகையில், உலகளாவிய Domino’s வர்த்தக நாமத்தின் அளப்பரிய அளவுகோலையும், நிபுணத்துவத்தையும் தொடர்ந்து பயன்படுத்துவதுடன், புதுமை, வாடிக்கையாளர் அனுபவம், வசதி மற்றும் வலுவான உள்ளூர் பொருத்தப்பாடு ஆகியவற்றில் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை மையப்படுத்த Domino’s ஸ்ரீலங்கா திட்டமிட்டுள்ளது.

























