Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
120 நாடுகள், 6,000 விற்பனை நிலையங்கள். இலங்கையில் தடம் பதிக்க தயாராகும் KUKA HOME

Aug 18, 2026 - 02:41 PM

 120 நாடுகள், 6,000 விற்பனை நிலையங்கள். இலங்கையில் தடம் பதிக்க தயாராகும் KUKA HOME
Mobitel Inner 1278

உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வீட்டலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான KUKA HOME, இலங்கையிலான தனது முதலாவது காட்சியறையை கொழும்பில் திறந்து வைத்துள்ளது. நவீன வாழ்க்கைக்கேற்ற சமகாலத் தளபாடங்களை நியாயமான விலையில் வழங்கி உலகப் புகழ்பெற்ற இச்சர்வதேச வர்த்தக நாமத்தை, இலங்கையில் Finco Holdings நிறுவனத்தின் தளபாட விற்பனைப் பிரிவான Finco Homes மூலமாக உத்தியோகபூர்வமாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 

“KUKA HOME நிறுவனம் நான்கு தசாப்தங்களுக்கு மேல் விருதுகள் வென்ற வடிவமைப்புக்கள், காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச நிபுணத்துவம் ஆகியவற்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்துகிறது. உலகளாவிய ரீதியில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 6,000க்கும் அதிகமான விற்பனை நிலையங்களைக் கொண்ட இவ் வர்த்தக நாமம், விரிவான வாடிக்கையாளர் தளத்தைச் சென்றடையும் வகையில் நவீன வாழ்வியலுக்கேற்ற பலதரப்பட்ட தயாரிப்புகளை வழங்குகின்றது. 

சர்வதேச வடிவமைப்புத் தரம் மற்றும் இலங்கை இல்லங்களின் எதிர்பார்ப்புகளை துல்லியமாகப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தளபாட வர்த்தக நாமத்திற்கான தேவை சந்தையில் இருப்பதை Finco Homes ஆகிய நாம் கண்டறிந்தோம். KUKA HOME நிறுவனத்தின் வடிவமைப்புத் திறன், உன்னதமான உற்பத்தித்தன்மை, தயாரிப்புகளின் விரிவு மற்றும் சர்வதேச நற்பெயர் என்பன இலங்கைச் சந்தைக்கு மிகச் சிறந்த பொருத்தங்களாகியுள்ளன," என Finco Homes நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சப்ராஸ் கரீம் தெரிவித்தார். 

1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட KUKA HOME, இத்தாலியின் மிலான் நகரில் உள்ள வடிவமைப்பு மையத்தின் வழிகாட்டலுடன் சீனா, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் 14 தயாரிப்பு நிலையங்களை இயக்கி வருகின்றது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் முன்னணி வடிவமைப்பு நிறுவனங்களுடனான கூட்டுறவுச் செயற்பாடுகளுக்காகவும் இந்நிறுவனம் உலகளவில் உலகளவில் பிரசித்தி பெற்றுள்ளது. 

ஆராய்ச்சி, தேர்ந்த வடிவமைப்பு, கைவினைத்திறன், தொழில்நுட்பம் மற்றும் நிலையான உற்பத்தி முறைகளுக்கு அதிக முக்கியத்துவமளிக்கும் ஒரு சர்வதேச வீட்டலங்காரப் பொருட்கள் வர்த்தகநாமத்துடன் கைகோர்ப்பதில் நாம் பெருமகிழ்ச்சடைகிறோம். இலங்கை வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம், பயன்பாடு மற்றும் பாணி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, விருது வென்ற வடிவமைப்புகளையும் பன்முகத்தன்மை கொண்ட தயாரிப்புகளையும் வழங்குவதன் மூலம் நாட்டின் இல்லங்களுக்கான உள்ளக அலங்காரத் துறையில் KUKA HOME ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருகிறது, என Finco Homes நிறுவனத்தின் பணிப்பாளர் தருஷ வீரசூரிய தெரிவித்தார். 

ஒரு முழுமையான கருத்தாக்க விற்பனையகமாக (Concept Store) வடிவமைக்கப்பட்டுள்ள இக்காட்சியறை, வாடிக்கையாளர்கள் தங்களது இல்லங்களையும் வாழ்க்கை முறைகளையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. KUKA HOME-இன் புத்தாக்கம் மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட வடிவமைப்புத் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பம் சார்ந்த வீடுகளுக்கான Smart Living கருத்தாக்கங்களும் இத்தயாரிப்புகளில் உள்ளடங்கியுள்ளன. 

வாடிக்கையாளர்கள் www.kukahome.lk எனும் இணையத்தளத்தினூடாகவும் இத்தயாரிப்புகளைப் பார்வையிட முடியும். 

சுற்றுச்சூழல் நிலைபேறாண்மையே KUKA HOME-இன் வர்த்தக தத்துவத்தின் முக்கிய அம்சமாக விளங்குகின்றது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதுடன் காரபன் தடத்தைக் (Carbon Footprint) குறைப்பதற்கும், சுற்றாடல் விழிப்புணர்வு கொண்ட உற்பத்தி முறைகளை ஊக்குவிப்பதற்கும் தொடர்ச்சியாகப் பங்காற்றி வருகின்றது. 

இல. 12, அல்ப்ரெட் ஹவுஸ் கார்டன்ஸ், கொழும்பு 03, எனும் முகவரியில் அமைந்துள்ள KUKA HOME காட்சியறை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.


MOST READ

காணொளி
https://youtu.be/Z2q5Pl1oZQM

https://youtu.be/Z2q5Pl1oZQM

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

Mobitel 1278