Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்!

Aug 18, 2026 - 06:03 PM

ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்!
Mobitel Inner 1278
EDEX Inner

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அரசியலில் களமிறங்கி ஆட்சியை பிடித்து இன்று முதலமைச்சராக 100 நாட்களை கடந்துள்ள விஜய் அவர்களின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. 

இதற்கிடையில் தேர்தல் நடைபெற்று அதில் விஜய் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின் பல தடைகளை தாண்டி ஜனநாயகன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. அதுவும் தளபதி விஜய் என்று இல்லாமல், முதலமைச்சர் விஜய் என்கிற டைட்டில் கார்டுடன் வெளிவந்து திரையரங்கை தெறிக்கவிட்டது. 

ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடினார்கள். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், ரேச்சல் ரெபேக்கா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

கடந்த மாதம் 23 ஆம் திகதி வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், கலவையான விமர்சனங்களும் வந்தன. மேலும் சில இடங்களில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனநாயகன் முன்பதிவில் இருந்து இதுவரை ஒவ்வொரு நாளும் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். உலகளவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்தது, வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பற்றிய விவரங்களையும் பார்த்திருக்கிறோம். 

இந்நிலையில், விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இறுதியாக 323.5 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. இது விஜய்யின் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான இறுதி வசூல் என்றாலும், திருட்டுத்தனமாக லீக்காகி 1.2 கோடி ரூபா பேர் பார்த்த திரைப்படத்திற்கு உலகளவில் 323.5 கோடி ரூபா இறுதி வசூல் என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

Mobitel 1278