Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்

Aug 19, 2026 - 12:24 PM

 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்
Mobitel Inner 1278
EDEX Inner

தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.

 

நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன பரிசோதகர்களும் இணைந்து தலவாக்கலை பகுதி வழியே பயணித்த பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் மற்றும் லொறிகள் உட்பட 40 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியான நிலையில் உள்ளதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

இதன்போது, பல்வேறு குறைபாடுகளுடன் தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அவற்றின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டதாக மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

 

ஏற்படும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது 4 தனியார் பேருந்துகள், 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வரை அவ்வாகனங்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

Mobitel 1278