Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
Orion Tower II இனை அறிமுகப்படுத்தும் Orion City இலங்கையின் புத்தாக்கத்திற்கான அமைவிடத்தின் அடுத்த கட்டம்

Aug 19, 2026 - 01:09 PM

Orion Tower II இனை அறிமுகப்படுத்தும் Orion City இலங்கையின் புத்தாக்கத்திற்கான அமைவிடத்தின் அடுத்த கட்டம்
Mobitel Inner 1278
EDEX Inner

சுமார் இரண்டு தசாப்தங்களாக, அலுவலக பணியிடங்களை உருவாக்குவதற்கு அப்பால், நிறுவனங்கள் புத்தாக்கங்களைப் படைக்கவும், இணைந்து செயற்படவும், வளர்ச்சி அடையவும் கூடிய ஒரு செழிப்பான வணிகச் சமூகத்தை உருவாக்குவதில் ‘Orion City’ உறுதியுடன் செயற்பட்டு வருகிறது. 

இன்று, ஓரியன் சிட்டி இலட்சியமிக்க கட்டுமானத் திட்டங்களில் ஒன்றான ‘Orion Tower II’ இன் அறிமுகத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2026 ஓகஸ்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 2029 ஜனவரியில் நிறைவடையும் என இலக்கிடப்பட்டுள்ளது. இதற்கான முதலீடானது, இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த வணிக மையத்தை உருவாக்குவதற்கான ஓரியன் சிட்டியின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகும். 

எமது வாடகைதாரர்கள் சமூகத்தின் அதிகரித்து வரும் தேவைகளுக்கும், உலகத்தரம் வாய்ந்த வணிக அலுவலக இடங்களுக்கான அதிகரித்துவரும் தேவைகளுக்கும் பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்படும் Orion Tower II, சுமார் 300,000 சதுர அடி உயர்ரக 'Grade A' அலுவலக இடங்களை வழங்கும். இது வணிக விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பதுடன், ஓரியன் சிட்டி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும். 

இதன் பிரதான திட்டம் (Master plan) சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற சிங்கப்பூரின் DP Architects நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது Orion Tower I உடன் தடையின்றி ஒருங்கிணைந்து, சுமார் 36,000 சதுர அடி இணைந்த தளப் பரப்பை வழங்கும் ஒரு அடையாளம் மிக்க அமைப்பாக உருவாக்கப்படுகிறது. இந்த புதிய கோபுரமானது கொழும்பு நகரின் 180 பாகை பரந்த காட்சியமைப்பையும், பணியிடத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் தூண்களற்ற பெரிய அலுவலகத் தளங்களையும் கொண்டிருக்கும். அத்துடன், சூழலின் நிலைபேறான தன்மை, புத்தாக்கம் மற்றும் சர்வதேச ரீதியான அலுவலக தரநிலைகளுக்கான ஓரியன் சிட்டி கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் LEED Platinum Certification சான்றிதழை பெறும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது. 

எப்போதும் ஓரியன் சிட்டியின் தொலைநோக்குப் பார்வையானது அலுவலகக் கட்டடங்களைக் நிர்மாணிப்பதற்கு அப்பாற்பட்டதாகும். வணிகங்கள், மக்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றாக இணைந்து வளரக்கூடிய சூழல்களினாலேயே வேலையின் எதிர்காலம் உருவாக்கப்படுகிறது என நம்புகிறது. 

அன்றாட பணியிடத்தின் அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் மற்றும் சேவைகளில் நீண்ட காலமாக ஓரியன் சிட்டி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. உயர் ரக அலுவலக உட்கட்டமைப்பு, நெகிழ்வான பணியிட பரப்புகள், குழந்தை பராமரிப்பு வசதிகள், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட உணவு மற்றும் பான வழங்கல்கள், உடற்பயிற்சி மற்றும் சுகவாழ்வு வசதிகள், விருந்தோம்பல் சேவைகள், சில்லறை வணிகங்களுக்கான வசதிகள், தொழில்முறை ரீதியில் நிர்வகிக்கப்படும் பொதுவான பகுதிகள், நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை முறை அனுபவங்கள் ஆகியன, எமது ஒருங்கிணைந்த வணிக கட்டமைப்பில் இன்று உள்ளடங்குகின்றன. 

Orion Tower II என்பது இந்த தொலைநோக்குப் பார்வையின் இயற்கையான பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது. உயர் ரக வணிக அலுவலக இடத்தை வழங்குவதற்கு அப்பால், ஓரியன் சிட்டியின் ஒருங்கிணைந்த வணிக கட்டமைப்பை இந்தத் திட்டம் மேலும் வலுப்படுத்தும் அதே வேளையில், எமது வாடகைதாரர்களுக்கும் அவர்களின் குழுக்களுக்கும் கிடைக்கக்கூடிய வசதிகள், சேவைகள் மற்றும் அனுபவங்களை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். 

இது குறித்து, Orion Development (Pvt.) Ltd. இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி, மிலிந்த விக்ரமரத்ன கருத்து தெரிவிக்கையில், Orion Tower II என்பது இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த வணிக மையத்தை உருவாக்குவதற்கான Orion City இன் நீண்டகால தொலைநோக்குப் பார்வையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த நிர்மாணமானது, இலங்கையின் எதிர்காலத்தின் மீதான எமது தொடர்ச்சியான நம்பிக்கையையும், வணிக வளர்ச்சியை ஆதரிக்கும், முதலீடுகளை ஈர்க்கின்ற மற்றும் எமது வாடகைதாரர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் நீடித்த மதிப்பை உருவாக்கும் உலகத்தரம் வாய்ந்த வணிக உட்கட்டமைப்பை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. என்றார். 

இது குறித்து Orion Development (Pvt.) Ltd. இன் சந்தைப்படுத்தலுக்கான தலைவர் சுதீர பண்டார கருத்து தெரிவிக்கையில், Orion Tower II என்பது வெறுமனே மற்றுமொரு அலுவலக கோபுரம் அல்ல. இது நிறுவனங்கள் புத்தாக்கங்களைப் படைக்கவும், இணைந்து செயற்படவும், வளச்சியடையவும் கூடிய ஒரு இணைக்கப்பட்ட வணிக கட்டமைப்பை உருவாக்குவதற்கான Orion City இன் பயணத்தின் அடுத்த கட்டமாகும். இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் பணியிட அனுபவத்தை மேம்படுத்துவதோடு, இலங்கையின் புத்தாக்கத்திற்கான அமைவிடம் எனும் Orion City இன் நிலையை வலுப்படுத்தும் வகையில் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. என்றார். 

Orion Tower II மூலம், சுமார் இரண்டு தசாப்த கால வெற்றியை Orion City தொடர்ச்சியாக கட்டியெழுப்புகிறது. இது உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பை நிலைபேறான தன்மை, தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் வாழ்க்கை முறையுடன் ஒருங்கிணைத்து, எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள வணிக மையங்களை உருவாக்குகிறது. இது இலங்கையின் வணிக ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு புதிய தரநிலையை நிர்ணயிக்கிறது. 

இத்திட்டம் Orion City நிறுவனத்தின் நீண்டகால விரிவாக்க மூலோபாயத்தின் அடுத்த கட்டத்தையும் குறிக்கிறது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வணிக உட்கட்டமைப்புடன் சர்வதேச நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் பரந்த வணிக சமூகம் உள்ளிட்டோருக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையில் வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான தனது அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

Orion City பற்றி 

சுமார் 20 ஆண்டுகளாக, இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த வணிக மையங்களில் ஒன்றாக Orion City திகழ்ந்து வருகிறது. இது 100 இற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் இருப்பிடமாகவும் உள்ள, 10,000 இற்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்களுக்கு ஆதரவளிக்கின்ற, ஒரு மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான வணிக மேம்பாட்டைக் கொண்ட அமைவிடமாக உள்ளது. 

ஒரு வணிக அலுவலக வளாகத்திற்கு அப்பால், ஒரு செழிப்பான வணிக கட்டமைப்பாக Orion City உருவெடுத்துள்ளது. இது உயர் ரக Grade A அலுவலக பணியிடங்கள், சேவை அடிப்படையிலான அலுவலகங்கள், விருந்தோம்பல், சில்லறை வணிகம், சுகவாழ்வு வசதிகள், அனைத்து விதமான உயர் வசதிகளைக் கொண்ட உட்கட்டமைப்பு, வணிக நிறுவனங்களும் மக்களும் இணையாக வளர உதவும் வாழ்க்கை முறை வசதிகளை ஒருங்கிணைக்கிறது. 

கொழும்பு 09 இல் உள்ள Orion City ஆனது, முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதாக இயங்கி வரும் நிலையில், கொழும்பு 03 இல் OC by Orion City வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டமை, ‘Orion Tower II’ இன் நிர்மாணம் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள 'Orion Kandy' இற்கான விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த வணிக மையங்களை உருவாக்குவதற்கான தனது தொலைநோக்குப் பார்வையை ஓரியன் சிட்டி தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.


MOST READ

காணொளி
தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

Mobitel 1278