Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
Imperial College of Business Studies (ICBS) மற்றும் University of the West of Scotland (UWS) இணைந்து இலங்கையின் முதலாவது பிரித்தானிய DBA கற்கைநெறியை அ

Aug 19, 2026 - 01:13 PM

Imperial College of Business Studies (ICBS) மற்றும் University of the West of Scotland (UWS) இணைந்து இலங்கையின் முதலாவது பிரித்தானிய DBA கற்கைநெறியை அ
Mobitel Inner 1278
EDEX Inner

Imperial College of Business Studies (ICBS) மற்றும் University of the West of Scotland (UWS) இணைந்து இலங்கையின் முதலாவது பிரித்தானிய DBA கற்கைநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது. Imperial College of Business Studies (ICBS) மற்றும் University of the West of Scotland (UWS) கூட்டாண்மை அமைத்து, இலங்கையில் வியாபார நிர்வாகத்துறையில் முதலாவது பிரித்தானிய கலாநிதி கற்கைநெறியை (Doctor of Business Administration - DBA) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுகமானது, நாட்டின் உயர்கல்வித் துறையில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கின்றது. 

இந்த DBA கற்கைநெறியானது, சிரேஷ்ட தொழில்முறைசார் வல்லுநர்கள், வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரச துறை நிறைவேற்று அதிகாரிகளுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கற்கைநெறியானது மேம்பட்ட ஆய்வுமுறை மற்றும் நடைமுறை வர்த்தக பயன்பாட்டை ஒன்றிணைத்து, நிறுவன ரீதியான சவால்களுக்குத் தீர்வுகாணவும், கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும் கலாநிதிப் பட்டதாரிகளைத் தயார்படுத்துகிறது. இக் கலாநிதித் தகுதியானது University of the West of Scotland (UWS) இனால் வழங்கப்படுகிறது. தொழில்முறைசார் வல்லுநர்கள் நமது நாட்டை விட்டு வெளியேறாமல், சர்வதேச தரம்மிக்க கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், Imperial College of Business Studies (ICBS) இக்கற்கைநெறியை இலங்கையில் முன்னெடுத்துச் செல்கிறது. Imperial College of Business Studies (ICBS) மற்றும் University of the West of Scotland (UWS) இடையிலான இந்த கூட்டாண்மையானது, அவ்விரு நிறுவனங்களுக்கும் இடையிலான தற்போதைய உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைகின்றது. 

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும், இலங்கையில் ஆய்வுசார் அணுகுமுறை கொண்ட வர்த்தகத் தலைவர்களை உருவாக்குவதையும் இரு நிறுவனங்களும் இலக்காகக் கொண்டுள்ளன. 

இந்த அறிமுகம் குறித்து Imperial College of Business Studies (ICBS) இன் கல்விப் பணிப்பாளர் (Director – Academic) பிரவிந்த் இராஜரத்னம் கருத்து தெரிவிக்கையில்: "இலங்கையில் வியாபார நிர்வாகத்துறையில் முதலாவது பிரித்தானிய கலாநிதி கற்கைநெறியின் அறிமுகமானது, உலகத்தரம் வாய்ந்த கலாநிதி கற்கைநெறியை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது வணிகங்கள், தொழில்துறைகள் மற்றும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆய்வுசார் அணுகுமுறை கொண்ட தலைவர்களை உருவாக்க உதவுகின்றது" என்றார். 

சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வணிகக் கல்வியை வழங்கி வரும் Imperial College of Business Studies (ICBS) 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். இக்கல்லூரி திறனாய்வுச் சிந்தனை (critical thinking), நடைமுறைசார் நிபுணத்துவம் மற்றும் நெறிமுறை சார்ந்த தலைமைத்துவம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதுடன் தொழிற்துறைக்கு பொருத்தமான பாடநெறிகள் மூலம் வணிகத் துறையில் தொழில்முறை எதிர்காலத்திற்கும் மாணவர்களை தயார்படுத்துகிறது.


MOST READ

காணொளி
தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

Mobitel 1278