Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும்!

Aug 20, 2026 - 10:55 AM

கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும்!
Mobitel Inner 1278
EDEX Inner

சினிமாவில் தன் தனித்துவத்தை நிரூபித்து வரும் சாய் அபயங்கர், தனுஷ் நடிக்கும் ‘ஓம்’, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’, கார்த்தியின் ‘மார்ஷல்’, சூர்யாவின் 48 ஆவது படம் உள்ளிட்ட பல திட்டங்களில் பிஸியாக உள்ளார். அட்லீ படத்துக்கு இசையமைக்கும் நிலையில், தனது மிகப்பெரிய இலக்கு கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பதே என அவர் கூறி, அதற்காக தொடர்ந்து உழைப்பேன் என உறுதியளித்தார். 

சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ஒரு உரையாடலின் போது யாருடைய படத்தில் பணியாற்ற ஆசை என கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் சொன்ன சாய், 

"2024 இல் என் முதல் பாடல் வெளியான போது நான் இதனை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன், இப்போது கூட நான் அட்லீ சார் படத்துக்கு இசையமைக்கிறேன் என்பதை நம்பமுடியவில்லை. இப்போது நான் `ராக்கா'வில் பணியாற்றுகிறேன். இதை போல தொடர்ச்சியாக பணியாற்ற ஆசை. மேலும் எனக்கு கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய இலட்சியம். 

யாரோ ஒருவர் Al வீடியோவில் கிறிஸ்டோபர் நோலன் என் இசையைப் பாராட்டுவது போல் உருவாக்கியிருந்தார்கள் அதைப் பார்த்தபோது மிகவும் உற்சாகமாக இருந்தது. அந்த வீடியோவில் நடப்பது போல் நிஜத்திலும் ஒருநாள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்." என தெரிவித்தார். 

மேலும் விஜய் படத்தில் பணியாற்ற முடியாமல் போனது பற்றி கேட்கப்பட "விஜய் சார் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு. அவருடன் பணியாற்றும் வாய்ப்பு இனி கிடைக்காது என நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. என் வாழ்க்கையில் நான் தவறவிடப்போகும் மிகப்பெரிய வாய்ப்பு இது. ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால், 16 பாடல்கள் கொண்ட ஆல்பத்தை அவருக்காக உருவாக்கியிருப்பேன்" என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

Mobitel 1278