Aug 20, 2026 - 08:31 PM





உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக்கடனுக்காக அதிகபட்சமாக 15 லட்சம் ரூபா வரை வழங்கப்படும் என்பதுடன், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 7 ஆண்டுகள் அவகாசம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 16 தனியார் பல்கலைக்கழகங்களில் 130 பாடநெறிகளின் கீழ் பட்டப்படிப்பு அல்லது தேசிய மட்டத்திலான டிப்ளோமா படிப்புகளை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இலங்கை முழுவதிலும் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டம், செப்டம்பர் 3 ஆம் திகதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை, கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்வதாக களுத்துறை மாவட்ட செயலாளர் சுனந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

























