Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி!

Aug 23, 2026 - 07:12 AM

சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி!
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

மத்திய வங்கி அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான கடந்த 7 மாதங்களில் சுற்றுலா வருமானமாக 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.

 

இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானமாக 2,031.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்தது.

 

அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் சுற்றுலா வருமானம் 11.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

மேலும், கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 285.5 மில்லியன் அமெரிக்க டொலர்களே ஈட்டப்பட்டுள்ளது.

 

அதேவேளை, இந்த ஆண்டின் கடந்த 7 மாத காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் மூலம் இலங்கைக்கு 8,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.

 

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒரு வளர்ச்சியைக் காட்டுகிறது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தது.

 

அத்துடன், கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278