Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
முதல் ரந்தோலி பெரஹரா இன்று - போக்குவரத்துத் திட்டம் இதோ

Aug 23, 2026 - 08:29 AM

முதல் ரந்தோலி பெரஹரா இன்று - போக்குவரத்துத் திட்டம் இதோ
Mobitel Inner 1278
EDEX Inner

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவின் முதலாவது ரந்தோலி பெரஹரா இன்று (23) மாலை 6.44 மணிக்குக் குறிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் வீதி உலா வரவுள்ளது.

 

இந்தப் பெரஹரா தளதா வீதி,விகாரை வீதி, தேவ வீதி, கொழும்பு வீதி, கொட்டுகொடல்ல வீதி, குறுக்கு வீதி , டி.எஸ். சேனாநாயக்க வீதி, ராஜா வீதி வழியே சென்று மேல்நோக்கி வந்து முதலாவது ரந்தோலி பெரஹரா நிறைவடையும்.

 

இந்தக் காலப்பகுதியில் கண்டி நகரத்திற்குள் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகளையும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வீதித் தடைகள் அமைத்தல், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளை வழங்குதல் போன்ற விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

 

முதலாவது ரந்தோலி பெரஹரா விபரங்கள்:

 

2026.08.23 ஆம் திகதி முதலாவது ரந்தோலி பெரஹரா மாளிகையிலிருந்து ஆரம்பமாகும்.  இது தலதா வீதி, பன்சல் வீதி, தேவ வீதி, கொழும்பு வீதி, கொடுகொடெல்ல வீதி, குறுக்கு வீதி (Cross Street), டி.எஸ். சேனநாயக்க வீதி, ரஜ வீதி வழியாகச் சென்று மீண்டும் மாளிகையை வந்தடையவுள்ளது.  

 

பெரஹரா மாலை 06.44 மணியளவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், பெரஹரா பயணிக்கும் மொத்தத் தூரம் 1 கிலோற்றர் 860 மீற்றர்கள் ஆகும்.  

 

நடைமுறைப்படுத்தப்படும் மாற்றுப் போக்குவரத்துத் திட்டங்கள்:

 

கடுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நகருக்கு வரும் கனரக வாகனங்கள்: மஹியாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரை வந்தடையலாம்.  

 

கடுகஸ்தோட்டை பகுதியிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள்: டி.எஸ். சேனநாயக்க வீதி ஊடாக வந்து, குறுக்கு வீதி வழியாக யட்டிநுவர வீதியை அடைந்து, வலதுபுறம் திரும்பி மீரமக்கம் பள்ளிவாசல் அருகில் இடதுபுறமாகப் பயணித்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாகச் செல்லலாம்.  

 

கடுகஸ்தோட்டை நோக்கி வெளியேறும் வாகனங்கள்: பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாக மஹியாவ நோக்கிச் செல்ல முடியும்.  

 

தென்னகும்புர மற்றும் அம்பிட்டிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்: சங்கராஜ மாவத்தை ஊடாக வேல்ஸ் பார்க் சந்தியை அடைந்து, எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பி போகம்பரை, ரயில் நிலையம் அருகில் செல்லலாம். அங்கிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகவும், நகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்லலாம்.

 

அத்துடன் ரஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து பள்ளிவாசல் வீதி ஊடாக கண்டி நகருக்குள் நுழைய முடியும். 

 

நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் செல்லும் வாகனங்கள்: மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்திலிருந்து தலதா வீதி ஊடாக வந்து, குயின்ஸ் ஹோட்டலின் பக்கவாட்டு நுழைவாயில் அருகில் உள்ள ஜோய் படகு சேவையைத் தாண்டி சங்கராஜ மாவத்தை ஊடாகப் பயணிக்கலாம். மேலும், போகம்பரை சுற்றுவட்டத்தில் எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி மற்றும் சங்கராஜ மாவத்தை ஊடாக அம்பிட்டிய மற்றும் தென்னகும்புர நோக்கிச் செல்ல முடியும்.

 

கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழையவும் வெளியேறவும்: வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதியை இரு திசைகளிலும் பயணிக்கப் பயன்படுத்த முடியும்.  

 

 

 


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278