Header Logo
SLIC
செய்திகள்
ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து - ஒருவர் பலி

Aug 23, 2026 - 08:48 PM

ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து - ஒருவர் பலி
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (23) பிற்பகல் கடற்கரை வீதி புகையிரதப் பாதையின் அலுத்கம,விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நபரொருவர் பலத்த காயமடைந்துள்ளார். 

மருதானை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட 'சாகரிகா' புகையிரதத்துடன், முச்சக்கர வண்டி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும், பாதுகாப்பு கடவை இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டி பிரதேச மக்கள் புகையிரதப் பாதையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதித் புகையிரதப் பாதையின் போக்குவரத்திற்குப் பாரிய இடையூறு ஏற்பட்டது. 

பின்னர் பொலிஸார் தலையிட்டு, புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டதுடன், தற்போது அந்தப் பாதையில் புகையிரதப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278