Header Logo
SLIC
செய்திகள்
2035 ல் இந்தியாவில் சொந்த விண்வெளி மையம் - இஸ்ரோ

Aug 23, 2026 - 10:19 PM

2035 ல் இந்தியாவில் சொந்த விண்வெளி மையம் -  இஸ்ரோ
Mobitel Inner 1278
EDEX Inner

2035ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். 

அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தில் பேசிய நாராயணன், இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தின் முதல் தொகுதிக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

இன்று, நாம் மூன்றாவது தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடுகிறோம். 

விண்வெளித் துறையில் புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய இலட்சியம் என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. 

இந்தியா 64 ஆண்டுகளுக்கு முன்பு தனது விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியது. இன்று நாம் புவி கண்காணிப்பு, தொலை உணர்வு, தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, தொலைதூரக் கல்வி, பேரிடர் எச்சரிக்கை மற்றும் தணிப்பு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்தல், வழிசெலுத்தல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தடமறிதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளில் சாமானிய மக்களுக்குச் சேவை செய்து வருகிறோம். 

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், பல திட்டங்கள் வரிசையில் உள்ளன. 

நாங்கள் ககன்யான் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். மேலும், நமது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை நிறுவும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம். 

முதல்கட்ட பணிகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது, 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். என தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278