Aug 23, 2026 - 10:33 PM





2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதற்கமைய, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,468,980 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,562 எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 27,884 ஆகும்.
இரண்டாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்துள்ளனர்.
அதன்படி இந்த ஒகஸ்ட்டில் 13,980 பேர் பிரித்தானியாவில் இருந்து வந்துள்ளனர்.
மூன்றாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 8,776 ஆகும்.
இதனிடையே, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 366,114 ஆகும்.
இதற்கு மேலதிகமாக, பிரித்தானியாவில் இருந்து 144,381 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 97,073 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், ஆண்டின் இதுவரையான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளது.























