Header Logo
SLIC
செய்திகள்
ஈரான் மீதான புதிய தடைகள் அமெரிக்காவின் விரக்தியின் அறிகுறி

Aug 24, 2026 - 05:38 AM

ஈரான் மீதான புதிய தடைகள் அமெரிக்காவின் விரக்தியின் அறிகுறி
Mobitel Inner 1278
EDEX Inner

ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். 

எனினும் இந்த புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை ஒரு விரக்தியின் அறிகுறியாக பார்ப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான புதிய நடவடிக்கைகள் ஈரானை வீழ்த்துவதில் இருந்து தோல்வியடையும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அமெரிக்கத் தலைவர்கள் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகி, அதே பழைய திட்டங்களை மீண்டும் கொண்டு வந்திருப்பது அவர்களது விரக்தியை பிரதிபலிப்பதாக காட்டுகிறது. 

நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையிலான ஒரு தீர்வைக் காண அமெரிக்கா, ஈரானுடன் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

சர்வதேசத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ளது. 

பெப்ரவரி 28 ஆம் திகதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, அதன் உட்கட்டமைப்புகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டுள்ளன. 

மேலும் இஸ்லாமியக் குடியரசின் மீதான வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆனால் சுமார் ஆறு மாத காலப் போருக்குப் பின்னரும் தெஹ்ரான் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக போரிட்டு வருகின்றது. 

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியற்ற எண்ணெய் கப்பல்களைப் பயணிக்க அனுமதிக்க மறுத்து, கப்பல் போக்குவரத்தை அது முடக்கியுள்ளது. 

நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால் உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278