Header Logo
SLIC
வணிகம்
இலங்கையின் AI எதிர்காலத்திற்கு வலுவூட்டுவதற்கு SLT-MOBITEL இனால் தேசிய AI நிறுவகத்திற்கு வலுவூட்டல்

Aug 24, 2026 - 11:23 AM

இலங்கையின் AI எதிர்காலத்திற்கு வலுவூட்டுவதற்கு SLT-MOBITEL இனால் தேசிய AI நிறுவகத்திற்கு வலுவூட்டல்
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையில் AI ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கொள்கை ரீதியான ஈடுபாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படவுள்ள பல்தரப்பு தேசிய தளமான “தேசிய AI நிறுவகத்திற்கு” நிறுவன உறுப்பினர் மற்றும் உள்கட்டமைப்புப் பங்காளராக தனது ஆதரவை வழங்குவதாக SLT-MOBITEL அறிவித்துள்ளது. 

தற்போது நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ள பிரேரிக்கப்பட்டுள்ள தேசிய AI நிறுவகத்தினால், அரசாங்க பங்காளர்கள், கல்வியாளர்கள், தொழிற்துறை மற்றும் சர்வதேச பங்காளர்களை, பல்- துறைசார் பங்கண்மைக் கட்டமைப்பினூடாக ஒன்றிணைக்கும். AI ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பை வசதிப்படுத்துதல், அரசாங்கப் பங்குதாரர்கள், கல்வியாளர்கள், தொழிற்துறை மற்றும் சர்வதேச பங்காளிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மற்றும் பகிரப்பட்ட AI உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளங்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்நிறுவனம் முன்மொழியப்பட்டது. பங்குதாரர்களின் ஈடுபாடு, கூட்டுப் பங்களிப்பு மற்றும் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு அமைதல் ஆகியவற்றின் மூலம் இதன் வழிகாட்டல் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், தற்போதுள்ள AI முயற்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், கூட்டுத் தொழில்நுட்ப வளங்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் தேசிய ரீதியில் சீரமைக்கப்பட்ட AI சூழலமைப்பை உருவாக்க ஆதரவளித்தல் ஆகியவற்றை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், AI முன்னுரிமைகள் மற்றும் ஆளுகை குறித்த தேசிய மட்டத்திலான கலந்துரையாடல்களுக்கான தளத்தை வழங்குதல், திறன் மேம்பாடு மற்றும் அறிவுப் பகிர்வுக்கு ஆதரவளித்தல், மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளையும் கூட்டாண்மைகளையும் ஊக்குவித்தல் என்பனவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன. 

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்தவும், AI இல் தேசிய திறனை ஒருங்கிணைக்கவும், கண்டுபிடிப்புகள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் ஒரு வினையூக்கியாக இம்மாபெரும் முயற்சியை SLT-MOBITEL முன்னெடுக்கிறது. முன்மொழியப்பட்டுள்ள தேசிய AI நிறுவகத்திற்கான அண்மையில் நிறைவுற்ற பங்குதாரர் அமர்வில், இலங்கையின் AI எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக அரசாங்கம், கல்வியாளர்கள், தொழிற்துறை மற்றும் பங்காளர்களை ஒன்றிணைத்தது. இந்நிகழ்வின் நிகழ்ச்சி நிரல், “தொலைநோக்கை அமைத்தல்” மற்றும் தேசிய முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டுதலில் இருந்து ஆரம்பித்து, வாய்ப்புகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டும் “பங்குதாரர்களின் பார்வைகள்” நோக்கி நகர்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற “இணக்கப்பாட்டைக் கட்டியெழுப்பும் பட்டறை”யில், பொதுவான முன்னுரிமைகளும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளும் அடையாளம் காணப்பட்டன. அடுத்த கட்டத்தை அபிவிருத்தி செய்வதில் பரிசீலனை மற்றும் வழிகாட்டல்களுக்காக, புதிதாக உருவெடுத்துள்ள கட்டமைப்பை அமைச்சுகளுக்குச் சமர்ப்பிக்கும் உயர்மட்ட “ஒப்புதல் அமர்வுடன்” அன்றைய தினம் நிறைவுற்றது. 

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அதில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர். எரங்க வீரரத்ன, ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி குழும தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா மற்றும் SLT-MOBITEL பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் கலாநிதி. ஹான்ஸ் விஜயசூரிய, லங்கா எடியுகேஷன் அன்ட் ரிசேர்ச் நெட்வேர்க் ஆலோசனை பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் ஜி. ரஜெல், Swarmio பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் கார்திகேசு மற்றும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்த குமார ஆகியோர் அடங்கியிருந்தனர். 

ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் அரசாங்கத் துறை மாற்றம் ஆகியவற்றிற்குப் பங்களிப்பதுடன், உலகளாவிய AI வரைபடத்தில் இலங்கையை ஒரு முக்கிய இடத்தில் நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய AI நிறுவகம் வடிவம் பெற்று வரும் வேளையில், இலங்கையின் AI சூழலமைப்பை முன்னெடுப்பதிலும், நாட்டின் “தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்குனர்” மற்றும் டிஜிட்டல் வலுவூட்டுனர் என்ற தனது பங்களிப்பை உறுதிப்படுத்துவதிலும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை SLT-MOBITEL இன் ஆதரவு வெளிப்படுத்துகிறது. சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பின் மூலம் இந்நிறுவனத்திற்குத் தேவையான பலமான அடித்தளத்தை SLT- MOBITEL வழங்கும் என்பதுடன், நிலையான செழிப்பிற்காக AI இன் ஆற்றலை வெளிக்கொணர இலங்கையை இது தயார்படுத்தும்.


MOST READ
06
 தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர் தலைவர்களை வரவேற்று, 2026-ஆம் ஆண்டிற்கான SEARIC உச்சிமாநாட்டை இலங்கை முதன்முறையாக நடத்த

தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர் தலைவர்களை வரவேற்று, 2026-ஆம் ஆண்டிற்கான SEARIC உச்சிமாநாட்டை இலங்கை முதன்முறையாக நடத்த

Aug 24, 2026 - 11:52 AM


காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278