Aug 24, 2026 - 11:35 AM





Mark and Comm நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் சமூக நுண்ணறிவு முகாமையாளரான அஞ்சலி முனசிங்க, CIPR International இன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னணி மக்கள் தொடர்பு மற்றும் ஊடக நிறுவனமான மார்க் அண்ட் கொம் (Mark and Comm), தனது பொது மக்கள் தொடர்பு மற்றும் சமூக நுண்ணறிவு முகாமையாளரான அஞ்சலி முனசிங்கவை மக்கள் தொடர்புக்கான பட்டய நிறுவனத்தின் (CIPR) சர்வதேச கிளைச் செயலகமான சிஐபிஆர் இன்டர் நெஷனல் (CIPR International) அமைப்பின் செயலாளராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் முன்னணி நிறுவனங்கள் சிலவற்றில் மக்கள் தொடர்பு , கணக்கியல் முகாமைத்துவம் மற்றும் ஊடகக் கண்காணிப்பு ஆகியவற்றில் முனசிங்கவிற்கு பத்து ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உள்ளது. அவர் அண்மையில் Adfactors PR Sri Lanka நிறுவனத்திலிருந்து விலகி மார்க் அண்ட் கொம் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு அவர் டிஜிட்டல் நற்பெயர் முகாமைத்துவ ஆலோசகராக பணியாற்றினார்; மேலும் வாடிக்கையாளர்களுக்காக நேரலை ஊடக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வுகளைக் கவனித்துக் கொண்டார். அதற்கு முன்பாக அவர் மல்லன்லோவ் இலங்கை (MullenLowe Sri Lanka) நிறுவனத்தில் மக்கள் தொடர்பு முகாமையாளராகப் பணியாற்றினார்.
இவரது தொழில் வாழ்க்கை, ஹார்ட்டோக் (HardTalk) நிறுவனத்தில் சிரேஷ்ட மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் , என்கேஜ் ஸ்ட்ராடஜிக் அலையன்ஸ் (NGage Strategic Alliance) நிறுவனத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றியதை உள்ளடக்கியது. மேலும் இவர் ஓகில்வி ஸ்ரீலங்காவில் (Ogilvy Sri Lanka) ஒலி-ஒளி ஒருங்கிணைப்பாளராக தனது ஆரம்பப் பயிற்சியைப் பெற்றார்.இவர் சமூக வலைத்தளங்களைக் கவனித்தல், நெருக்கடி காலத் தொடர்பாடல், மனநிலைப் பகுப்பாய்வு மற்றும் நேரலை ஊடகக் கண்காணிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் இவர் தேசிய ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக நிபுணத்துவ கருத்துக்களை வழங்கும் குரலாக பங்களித்து வருகிறார்.
CIPR இன்டர்நெஷனல் என்பது ஐந்து கண்டங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்பு (PR) நிபுணர்களை இணைக்கும் மற்றும் சுமார் 1,000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய அமைப்பாகும். மார்க் அண்ட் கொம் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தன்சில் தாஜுதீன், CIPR இன்டர்நெஷனல் குழுவில் அங்கம் வகிக்கிறார்; இதன்மூலம் முனசிங்கவின் நியமனமானது இலங்கையிலிருந்தும் அந்த நிறுவனத்திலிருந்தும் பெறப்பட்ட இரண்டாவது நியமனமாகும்.
CIPR இன்டர்நெஷனல் தலைவர் தாஜிமா கலா தெரிவிக்கையில்:
அஞ்சலி சமூகம் எதை எதிர்பார்க்கிறதோ அல்லது எதைச் சார்ந்து இருக்கிறதோ, அதே போன்ற கள அனுபவத்தையும் வட்டாரப் பார்வையும் கொண்டு வருகிறார். குறிப்பாக நெருக்கடி காலத் தொடர்பாடல் மற்றும் ஊடக நுண்ணறிவு ஆகியவற்றில் அவரின் பணிகள் மிகச் சிறந்தவை. செயலாளராக அவர் வழங்கும் பங்களிப்பை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.























