Aug 24, 2026 - 05:03 PM





2024 ஆம் ஆண்டில் இருந்து பேட் கம்மின்ஸ் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார்.
அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி தலைவர் பேட் கம்மின்ஸ். உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளரான இவர் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கிண்ணத்தில் இவர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி வென்றது. அதன்பின் அவுஸ்திரேலியா 28 போட்டிகளில் விளையாடியது. இதில் கம்மின்ஸ் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
கடந்த வாரத்தில் முடிவடைந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் விளையாடினார். இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 1-1 எனத் தொடரை சமன் செய்தது.
அவுஸ்திரேலியாவில் செப்டம்பர் வரை உள்ளூர் போட்டிகள் பெருமளவில் இல்லை. அவுஸ்திரேலியா சீனியர் அணி ஜம்பாப்வே சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இது செப்டம்பர் 15 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது.
அதன்பின் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 24, 27 மற்றும் அக்டோபர் 1 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இதன்பின் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.
மொத்தம் 6 போட்டிகள் உள்ளன. இதில் பேட் கம்மின்ஸ் விளையாட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக கம்மின்ஸ் கூறியதாவது,
தென்னாப்பிரிக்காவுக்கு (Proteas) எதிரான இருதரப்பு 50 ஓவர் தொடரில், குறைந்தது சில போட்டிகளிலாவது நான் பங்கேற்பேன் என்று நினைக்கிறேன். இதைச் சொல்வது சரியா என்று தெரியவில்லை.
ஆனால் எங்கள் முக்கிய கவனம் டெஸ்ட் தொடரின் மீதே உள்ளது. எனவே, வரவிருக்கும் பல வெள்ளைப்பந்து (white-ball) ஒருநாள் போட்டிகளில், சிவப்புப் பந்து (red-ball/டெஸ்ட்) கிரிக்கெட்டைக் கருத்தில் கொண்டே நாங்கள் விளையாடுவோம். அந்த ஆறு (ஒருநாள்) போட்டிகளில் ஒன்று, இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று போட்டிகளில் நான் விளையாடுவேன். இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
33 வயதாகும் பேட் கம்மின்ஸ் கடைசியாக 2024 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் விளையாடினார். இதுவரை பேட் கம்மின்ஸ் 90 போட்டிகளில் விளையாடி 143 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.























