Header Logo
SLIC
விளையாட்டு
சிஎஸ்கே அணியிலிருந்து ஹஸி வெளியேற முடிவு!

Aug 25, 2026 - 10:37 AM

சிஎஸ்கே அணியிலிருந்து ஹஸி வெளியேற முடிவு!
Mobitel Inner 1278
EDEX Inner

ஆஷஸ் தொடருக்கு முன்னதாக, சிஎஸ்கே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்கேல் ஹசியை தங்கள் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

'மிஸ்டர் கிரிக்கெட்' என்று அழைக்கப்படும் முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் விரும்பப்படும் பயிற்சியாளர்களில் ஒருவராக மாறியுள்ளார். தனது வெற்றிகரமான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 51.5 என்ற சிறந்த ஓட்டங்களை சராசரியைக் கொண்டுள்ள ஹசியை, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளின் தேசிய அணிகளும் தங்கள் துடுப்பாட்ட பயிற்சியாளராக்க முயற்சி செய்து வருகின்றன. 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங், சிஎஸ்கே அணியில் நீண்ட நாட்களாக தன்னுடன் பணிபுரிந்த மைக்கேல் ஹசியை இங்கிலாந்து அணியுடன் இணைத்துக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் குறித்து பேசிய ஹசி, பிளெமிங் தன்னிடம் இதுகுறித்து பேசியதை ஒப்புக்கொண்டார். 

"நாங்கள் இருவரும் மிகச் சிறந்த முறையில் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் என்னிடம் தற்செயலாகப் பேசும்போது, 'இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். 

கிரிக்கெட்டில் எதற்கும் நான் 'இல்லை' என்று சொல்ல மாட்டேன்" என ஹசி தெரிவித்தார். ஆனால், மைக்கேல் ஹசி இங்கிலாந்து அணியில் இணைவதைத் தடுக்கும் நோக்கில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு அவசரமாக ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தற்போது, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளின் துடுப்பாட்ட வரிசையும் சற்று தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறது. அவுஸ்திரேலிய அணியில் அனுபவ வீரர்கள் இருந்தாலும், பங்களாதேஷிற்கு எதிரான முதல் டெஸ்டில் அவர்களின் துடுப்பாட்ட பலவீனம் வெளிப்பட்டது. 

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களின் சராசரி 31.12 ஆக உள்ள நிலையில், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் சராசரி 27.84 ஆக மட்டுமே உள்ளது. 

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் அணி தலைவரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஹசிக்கு ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார். அவர் மீண்டும் பிளெமிங்குடன் இணைவது ஒரு "தவறு" என்று ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். 

"மைக்கேல் ஹசி அந்த தவறை செய்ய வேண்டாம் என்று நான் அறிவுறுத்துகிறேன். அவர் மீண்டும் ஸ்டீபன் பிளெமிங்குடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக அவர் சிஎஸ்கே அணியிலேயே தொடர வேண்டும், ஏனெனில் அவர்கள் அவரை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்வார்கள். 

பிளெமிங்கிற்கு வேறு வேலை இல்லை, அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஹசியை மட்டுமே அழைக்கிறார்" என்று ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.


MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278