Header Logo
SLIC
நிகழ்வுகள்
நினைவேந்தல்!

Aug 27, 2026 - 08:17 AM

நினைவேந்தல்!
Mobitel Inner 1278
EDEX Inner

1990 ஆம் ஆண்டு மண்டைதீவில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (26) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

36 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் இடம்பெற்ற சம்பவங்களில் உயிரிழந்ததாகவும், காணாமலாக்கப்பட்டதாகவும் கூறப்படும் உறவுகளை நினைவுகூரும் வகையில், மண்டைதீவில் அமைந்துள்ள நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்றுகூடி சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், சம்பவத்தில் தனது மகனை இழந்த 81 வயதான ஸ்ரீபன் மரில்டா முதன்மைச் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். 

தொடர்ந்து அருட்தந்தை வசந்தன் மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் நினைவிடத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

இதன்போது மண்டைதீவு பங்குத்தந்தை அலோய் அருணேஷகும்மார், அருட்தந்தை வசந்தன், அருட்சகோதரிகள், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சி. அசோக்குமார், பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், அனுசியா ஜெயகாந்த், ஜோசம் கனிஸ்டன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

36 ஆண்டுகள் கடந்துள்ள இந்தச் சம்பவங்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கிடைக்க வேண்டும் என்பதே நினைவேந்தலில் கலந்துகொண்ட உறவுகளின் பிரதான கோரிக்கையாக இருந்தது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278