Aug 29, 2026 - 01:34 PM





கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
நேற்று பிற்பகல் (28) பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 15 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான மரக் குற்றிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சாரதி மற்றும் கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் ஆகியவற்றை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்தார்.























