Header Logo
SLIC
செய்திகள்
பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை உயர்வு

Aug 29, 2026 - 02:04 PM

பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை உயர்வு
Mobitel Inner 1278
EDEX Inner

பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த சிற்றுண்டிகளின் விலைகளை 5 ரூபாவால் உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

அத்துடன், இடியாப்பம் ஒன்றின் விலையை 1 ரூபாவினாலும், அப்பம் ஒன்றின் விலையை 2 ரூபாவினாலும் உயர்த்தவும் அச்சங்கம் தீர்மானித்துள்ளது. 

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இத்தீர்மானங்களை எடுத்துள்ளது. 

இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை கூடவுள்ளது. 

அன்று கூடி, பாண் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278