Header Logo
SLIC
விளையாட்டு
16 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா

Aug 30, 2026 - 01:13 PM

16 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா
Mobitel Inner 1278
EDEX Inner

உலகக் கிண்ண ​ஹொக்கி போட்டி பெல்ஜியத்தின் வாவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. 

பெண்கள் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், 9 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் முதலாம் நிலை அணியுமான நெதர்லாந்து, முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டினாவை எதிர்கொண்டது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. 

நெதர்லாந்து அணிக்காக யிபி ஜான்சென் 30-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார். 

இதற்கு பதிலடி கொடுத்த அர்ஜென்டினாவின் மரியா ஜோஸ் கிரனட்டோ 54-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார் 

ஆட்டம் சமனில் முடிந்ததை தொடர்ந்து, சாம்பியனை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது. 

இதில் அபாரமாக செயல்பட்ட ஆர்ஜென்டினா அணி, 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

இதன் மூலம் ஆர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கிண்ண ​ஹொக்கி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

அந்த அணி இதற்கு முன்பு 2002 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை கைப்பற்றியிருந்தது. 

இதனிடையே, ஆண்கள் பிரிவு உலகக் கிண்ண ​ஹொக்கி தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 

இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்- ஜேர்மனி அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278