Header Logo
SLIC
இந்தியா
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

Aug 31, 2026 - 07:20 AM

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
Mobitel Inner 1278
EDEX Inner

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (31) மீண்டும் கூடுகிறது. 

தமிழக சட்டசபையில் கடந்த 5ஆம் திகதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது வரவு செலவு திட்டமும், 6ஆம் திகதி வேளாண் வரவு செலவு திட்டமும் தாக்கல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து, 7, 10,11 ஆகிய திகதிகளில் வரவு செலவு திட்டம் மீதான விவாதமும், 12ஆம் திகதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. 

இந்த நிலையில், 17ஆம் திகதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 32 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது. 

இந்த நிலையில், கடந்த 2 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (31) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது. 

முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. 

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரான முதலமைச்சர் ஜோசப் விஜய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக, தங்களது துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278