Aug 31, 2026 - 10:18 AM





அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மோதல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
இதற்கமைய, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.57% அதிகரித்து 85.54 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.84% அதிகரித்து 90.60 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, மர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 4.04% என்ற சதவீதத்தில் அதிகரித்து 95.75 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஈரான் நாட்டின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதுடன், அதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
இவ்வாறு மத்திய கிழக்கில் ஆரம்பமாகியுள்ள புதிய போர் மோதல்கள் காரணமாகவே கச்சா எண்ணெய் விலைகள் இவ்வாறு உயர்வடைந்துள்ளன.























