Aug 31, 2026 - 12:37 PM





#1 Agentic CRM* நிறுவனமான Salesforce, இலங்கையில் தனது வளர்ந்து வரும் முதலீட்டையும், உள்ளூர் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) விரைவாகப் பயன்படுத்துவதில் உள்ள நம்பிக்கையையும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், தனது முதல் Salesforce புத்தாக்க தினத்தை கொழும்பில் (Salesforce Innovation Day Colombo) நடத்தவுள்ளதாக இன்று அறிவித்தது.
நம்பகமான செயற்கை நுண்ணறிவு, இணைக்கப்பட்ட தரவு மற்றும் அறிவார்ந்த தானியக்கம் ஆகியவை இலங்கை நிறுவனங்கள் உலகளவில் போட்டியிடவும், உற்பத்தித்திறன், ஆழமான வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் புதிய வளர்ச்சிப் பாதைகளை உருவாக்கவும் எவ்வாறு உதவும் என்பதை ஆராய்வதற்காக, இந்த நிகழ்வு 200-க்கும் மேற்பட்ட வணிகத் துறைத் தலைவர்கள், வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைக்கும்.
பேச்சாளர் வரிசையானது, இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் பல்வகைப்பட்ட நிறுவனங்கள், மருந்துத் தொழில், சில்லறை வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளைப் பிரதிபலிக்கிறது. முக்கிய பேச்சாளர்களில், John Keells Holdings PLC நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைவர் மற்றும் குழுமத் தலைமைத் தகவல் அதிகாரியான ரமேஷ் சண்முகநாதன்; Keells Supermarkets நிறுவனத்தின் அனைத்து வழி வணிகம், டிஜிட்டல் மற்றும் நம்பிக்கை அங்கத்துவப் பிரிவின் தலைவரான நிரேஷ் முத்துரத்னானந்தன்; மற்றும் Dilmah Ceylon Tea Company PLC நிறுவனத்தின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தலைவரான யசோதா சூரியகீர்த்தி ஆகியோர் அடங்குவர்.
கூட்டாளர் மற்றும் ஆலோசனைக் கண்ணோட்டங்களை, Deloitte நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வாடிக்கையாளர் தலைவரான ஹரேஷ் பெரேரா மற்றும் Altria Consulting (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளரான சாமிகர பெரேரா ஆகியோர் வழங்குவார்கள். இவர்கள் Salesforce கூட்டாளராகவும் வாடிக்கையாளராகவும் Altria-வின் அனுபவத்திலிருந்து பெற்ற நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.
தலைமைத்துவ உரையாடல்கள், நேரடி செயல்விளக்கங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வரலாறுகள் மூலம், இலங்கை வணிகங்கள் செயற்கை நுண்ணறிவை வெறும் பரிசோதனை செய்வதிலிருந்து விலகி, விற்பனை, சேவை, சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் அதனைப் பொறுப்புடன் எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை கொழும்பு புத்தாக்க தினம் நிகழ்வானது வெளிக்காட்டும்.
“இலங்கையில் தொழில்முனைவோர் ஆர்வம், டிஜிட்டல் திறமை மற்றும் புத்தாக்கங்களைப் புகுத்தத் தயாராக உள்ள வணிகங்கள் ஆகியவற்றின் வலுவான அத்திவாரம் உள்ளது, என்று Salesforce - இந்தியா மற்றும் இலங்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் மங்கிரன் சௌஹான் கூறினார். “கொழும்பு புத்தாக்க தினம், இந்த வாய்ப்பின் மீதான எங்கள் நம்பிக்கையையும், அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் நீண்ட காலத்திற்கு ஆதரவளிப்பதில் உள்ள எங்கள் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. நம்பகமான செயற்கை நுண்ணறிவு, தரவு, திறன்கள் மற்றும் ஒரு வலுவான உள்ளூர் சூழலமைப்பை ஒன்றிணைப்பதன் மூலம், இலங்கை நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்ப ஆற்றலை, தமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கு அர்த்தமுள்ள விளைவுகளாக மாற்றுவதற்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்.
புத்தாக்க தினம் என்பது, திறன்கள், தொடக்க வணிக நிறுவனங்கள், கூட்டாளர்கள் மற்றும் நிறுவன மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கி, Salesforce இலங்கையில் கட்டமைத்து வரும் ஒரு பரந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்:
● டிஜிட்டல் திறன்களை வளர்த்தல்: Trailhead, Agentblazer கற்றல், பணியாளர் கூட்டாளர்கள் மற்றும் Trailblazer சமூகம் ஆகியவற்றின் மூலம், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் மாறுபவர்களுக்கு வேலைக்குத் தயாரான டிஜிட்டல் திறன்களை வளர்க்க Salesforce உதவுகிறது - இன்றுவரை இலங்கையில் பல செயற்கை நுண்ணறிவு கற்பவர்கள் Salesforce ஆதரவு திட்டங்கள் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர்.
● தொடக்க வணிக நிறுவனங்களுக்கு உதவுதல்: Salesforce தனது Startup Program திட்டத்தை ஜனவரி 2026-இல் இலங்கைக்கு விரிவுபடுத்தியது. இது நிறுவனர்களை, அதன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், சமூக ஆதரவு மற்றும் கூட்டு சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் உள்ளிட்ட பரந்த Salesforce சூழலமைப்போடு இணைக்கிறது. இந்த விரிவாக்கம், இந்தியா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் 435-க்கும் மேற்பட்ட தொடக்க வணிக நிறுவனங்களைக் கொண்ட ஒரு பிராந்திய சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் 230-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவை முதன்மைப்படுத்தும் தொடக்க வணிக நிறுவனங்களும் அடங்கும்.
● கூட்டாளர் சூழலமைப்பை வலுப்படுத்துதல்: Altria Consulting (Pvt) Ltd, Deloitte, John Keells IT (முன்னோடி அனுசரணையாளர்), Mawkish Technologies மற்றும் Teardrop AI போன்ற ஆலோசனை கூட்டாளர்கள், நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு குறித்த தங்கள் இலட்சியத்திலிருந்து அதைச் செயல்படுத்தும் நிலைக்கு மாற உதவுகின்றனர். மேலும், Salesforce-இன் தொழில்நுட்பத்திற்குத் துணையாக அமையும் செயலாக்க நிபுணத்துவம் மற்றும் மாற்ற முகாமைத்துவத் திறனையும் அவர்கள் கொண்டு வருகின்றனர்.
● வாடிக்கையாளர் மாற்றத்தை முன்னெடுத்தல்: விற்பனை, சேவை, சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் வாடிக்கையாளர் ஈடுபாட்டை வலுப்படுத்தவும், டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லவும், Keells Supermarkets, John Keells CG Auto மற்றும் Dilmah Ceylon Tea Company PLC உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு Salesforce ஏற்கனவே ஆதரவளித்து வருகிறது.
ஒன்றிணைந்து, இந்த முயற்சிகள் Salesforce நிறுவனத்தை இலங்கையில் நுழையும் ஒரு தொழில்நுட்ப விற்பனையாளராக மட்டுமல்லாமல், நாட்டின் டிஜிட்டல் மற்றும் பொருளாதார இலட்சியங்களில் ஒரு நீண்டகாலப் பங்காளராகவும் நிலைநிறுத்துகின்றன.























