Sep 1, 2026 - 03:23 PM

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் LCU இல் வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பட ரிலீஸ் நேரத்தில் அது எல்.சி.யு.வில் வரலாம் என லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு எடவன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த பேட்டியில் அப்படி பேசி லோகேஷ் கனகராஜிடம் திட்டு வாங்கியதாக அண்மையில் தெரிவித்தார் விஷ்ணு எடவன்.
அவர் தெரிவிக்கையில்,
கூலி ரிலீஸ் டைமில் நான் ஒரு பேட்டி கொடுத்தேன். அதில் கூலி எல்.சி.யு.வில் வரலாம், யார் கண்டது என சொன்னேன். படம் ரிலீஸானதற்கு பிறகு என்னை பயங்கரமாக கிண்டல் செய்தார்கள்.
கூலி எல்.சி.யு.வில் வராது என்று உனக்கு தெரியும் தானே. அப்போ ஏன்டா அப்படி பேசின என லோகேஷ் என்னிடம் கேட்டார்.
இல்லண்ணா, அப்படி சொன்னால் தீயாக இருக்கும் என நினைத்து பேசிவிட்டேன். அவர் என்னை பார்த்து, உனக்கு வேண்டுமானால் தீயாக இருக்கும், ஆனால் எனக்குனு சொல்லிவிட்டு இடத்தை காலி செய்துவிட்டார். கூலி பற்றி அப்படி பேசியிருக்கக் கூடாது என்று அதன் பிறகே உணர்ந்தேன் என தெரிவித்தார்.
கூலி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் கவுரவத் தோற்றத்தில் வந்ததால் பெரிய ஹைப் இருந்தது. ஆனால் படம் ரிலீஸான பிறகு இதுக்கு தான் அவரை மும்பையில் இருந்து அழைத்து வந்தீர்களா லோகி?. ஆமீர் கான் பாவம் என்றார்கள் ரசிகர்கள். மேலும் கூலி படம் திருப்தியாக இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.
தயவு செய்து இனியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்காதீர்கள் தலைவா. அவர் ஸ்டைல் நமக்கு செட்டாகவில்லை என ரஜினிகாந்திடம் அவரின் ரசிகர்கள் தெரிவித்தனர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் சேர்ந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவாராம் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு லோகேஷுக்கு அல்ல மாறாக நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்துவிட்டது.
முன்னதாக லோகேஷ் பெயர் அடிபட்ட போது ரஜினியையும், கமலையும் போதைப் பொருள் கடத்தும் ஆளாக நடிக்க வைப்பாரே. இது தேவையில்லாத விஷயம் என ரசிகர்கள் கூறினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் KHxRK பட ப்ரொமோ வீடியோவை வெளியிட்ட நெல்சன் திலீப்குமாரோ தன் பட ஹீரோ ரஜினியா இல்லை கமல் ஹாசனா என்பதை சொல்லாமலேயே முடித்துக் கொண்டார்.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்பது மாதிரி உங்கள் பட ஹீரோ யாருனு கேட்க வைத்துவிட்டீங்களே நெல்சா என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிப்பில் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான ஹாய் படம் இதுவரை இந்தியாவில் 7.67 கோடி ரூபா வசூல் செய்திருக்கிறது. படம் குறித்த பேட்டிகளில் நயன்தாராவும், கவினும் ஜாலியாக பேசியது ரசிகர்களை கவர்ந்தது. இதே மாதிரி அனைத்து படங்களுக்கும் நயன்தாரா விளம்பரம் செய்தால் நன்றாக இருக்கும் என்றார்கள்.
பேர்லி மானிக்கு அளித்த பேட்டியில் தான் யாரடி நீ மோகினி படம் பார்க்க நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டருக்கு போய் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கிய கதையை கூறினார் கவின். அதை கேட்டு நயன்தாரா ஆச்சரியப்பட்டார்.



























