Sep 2, 2026 - 02:26 PM

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக தெரிவித்துள்ளார்.
உழைக்கும் போது அறவிடப்படும் வரியால் (PAYE Tax) மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அந்த நிலைமையை விரைவாகச் சரிசெய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர்களின் சங்கத்தின் 21ஆவது மநாடானது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக மற்றும் உள்நாட்டு இறைவரி பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.எச். பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.



























