Sep 3, 2026 - 03:52 PM

Huawei நிறுவனத்தின் E-band Microwave தயாரிப்பான RTN 3800, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 2026 iF Design மற்றும் Red Dot Design ஆகிய இரு உயரிய விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. E-band Microwave RTN 3800 அமைப்பின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே இந்த சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
தொடர்பாடல் கோபுரங்களில் எளிதாகப் பொறுத்தக்கூடிய வசதி, 12.5 Gbps வரையிலான அதிவேகத் தரவுப் பரிமாற்றத் திறன் (Data Transmission Capacity), 5G விவாக்கம் மற்றும் வலையமைப்பு நிலைத்தன்மைக்கு அத்தியாவசியமான உயர் நம்பகத்தன்மை ஆகிய அம்சங்கள் நடுவர் குழுவின் சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளன.
உலகளாவிய மைக்ரோவேவ் தொடர்பாடல் துறையில் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் Huawei நிறுவனத்தின் முன்னோடிப் பங்களிப்பை இந்த விருதுகள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன.
வானொலி சமிஞ்சை மற்றும் பேஸ்பேண்ட் மொடியூல்களை (Baseband modules) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள RTN 3800 அமைப்பானது, வெளிப்புறத் தொடர்பாடல் கோபுரங்களில் பொறுத்தப்படும் ஒரு E-band outdoor microwave அமைப்பாகும். உலகளவில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் இத்தயாரிப்பு பிரபலமடைவதற்கான முக்கிய காரணங்கள்:
உயர் தரவுத் திறன் (High Data Capacity): அதிகபட்சமாக 12 Gbps தரவுத் திறனை வழங்கும் இத்தொழில்நுட்பமானது, சந்தையில் உள்ள ஏனைய ஒத்த தயாரிப்புகளின் சராசரி 10 Gbps திறனை விட கணிசமாக அதிகமாகும். இதன் மூலம் ஒரு Bit தரவுப் பரிமாற்றத்திற்கான செலவை 25% வரை குறைக்க முடிகிறது.
உயர் நம்பகத்தன்மை (High Reliability): இத்தயாரிப்பின் சமிக்ஞை பரிமாற்ற ஆற்றலானது Signal Transmission Power) adaptive transmit power & adaptive modulation மற்றும் adaptive channel bandwidth ஆகிய அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களிலும் முந்தைய E-band மாதிரிகளை விட முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும் எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் நிலையான வலையமைப்பு தொடர்பாடலைப் பராமரிக்க முடிகிறது.
இந்த சிறப்பு வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த Huawei Microwave தயாரிப்புகளின் தலைவர் ஜேசன் வாங்க், “iF Design மற்றும் Red Dot Design விருதுகள் எமது RTN 3800 தயாரிப்பின் சிறந்த வன்பொருள் வடிவமைப்புத் திறனுக்கு (Hardware Design Capability) கிடைத்த மிக உயர்ந்த அங்கீகாரமாகும். இவற்றுடன் இணைந்து, சிறந்த செயல்பாட்டுத் திறன், எளிமையான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் கூடிய தயாரிப்புகளை உலகிற்கு வழங்குவதற்காக எமது தொழில்நுட்பத் திறன்களை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்றார்.



























