Header Logo
SLIC
சினிமா
கவினோட அந்த படம் எனக்கு பிடிக்கவே இல்லை!

Sep 3, 2026 - 04:28 PM

கவினோட அந்த படம் எனக்கு பிடிக்கவே இல்லை!
Mobitel Inner 1278
EDEX Inner

நயன்தாரா தயாரித்து நடித்த 'ஹாய்' படத்தில் அவருக்கு ஜோடியாக கவின் நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான ஹாய் திரைப்படம் சுமார் 10 கோடி வசூலை நெருங்கி விட்டது. கவின் நடிப்பில் கடைசியாக வெளியான 3 படங்களும் தோல்வியை தழுவிய நிலையில், ஹாய் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. 

ஹாய் படத்தில் கவின் அம்மாவாக ராதிகா சரத்குமார் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் கவினை அறையும் காட்சிகள் எல்லாம் பளார் பளார் என நிஜமாகவே அடித்திருப்பார் என்றே தெரிகிறது. 

இந்நிலையில், நேற்று (02) நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும், மேடையிலேயே கவினை வச்சு செய்து விட்டார் ராதிகா சரத்குமார். 

கவின் நடிப்பில் வெளியான ஒரு படம் தனக்கு பிடிக்கவே இல்லை என நேரடியாக அவரிடமே சொல்லிவிட்டேன் என்று மேடையில் பேசி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ராதிகா சரத்குமார். 

நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், 

"முதலில் 'ஹாய்' படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றிருக்கும் படக்குழுவினருக்கு என் பாராட்டுகள். 

இயக்குநர் விஷ்ணு பல சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார். ஹாய் படத்தை பார்க்கவே இல்லை "நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பலரும் மிகவும் ரசித்ததாகவும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். 

பாக்யராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. நகைச்சுவையாகப் பழகும் அவர், தனது அனுபவத்தின் மூலம் பல அருமையான ஆலோசனைகளையும் வழங்குவார். அதேபோல், பிரபு சார் எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர். அவரது குடும்பத்தின் விருந்தோம்பலும், சினிமா மீதான அன்பும் எப்போதும் சிறப்பானது," என்றார். 

கவினின் 'டாடா' படத்தைப் பார்த்தபோதே அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நினைத்தேன். ஆனால், அடுத்து ஒரு படம் பார்த்தேன். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. ஹாய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கவினை பார்த்த போது அவரிடம் முகத்து நேராகவே அதை சொல்லி விட்டேன். 

அவர் அப்படியே ஷாக் ஆனாலும், அது உண்மை தான் மேடம் என்று அவர் சொன்ன விதம் என்னை இம்ப்ரஸ் செய்தது. கவின் மிகப்பெரிய ஸ்டார் ஆக வளர்ந்து வருகிறார். சிறப்பான படங்களை தொடர்ந்து கொடுத்து அவருக்கான பெரிய உச்சத்தை தொடுவார், தொட வேண்டும் என்றார். 

மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வெற்றியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நயன்தாரா வெளியில் மென்மையானவராகத் தோன்றினாலும், மனதளவிலும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர். இந்த வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்," என்றார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

Mobitel 1278