Header Logo
SLIC
வணிகம்
‘The Unlabelled Runway 2026’ ஃபேஷன், உள்ளடக்கம் மற்றும் சமூக தாக்கத்தை ஒரே மேடையில் இணைக்கும் புதிய முயற்சி

Sep 3, 2026 - 05:04 PM

‘The Unlabelled Runway 2026’ ஃபேஷன், உள்ளடக்கம் மற்றும் சமூக தாக்கத்தை ஒரே மேடையில் இணைக்கும் புதிய முயற்சி
Mobitel Inner 1278
EDEX Inner

ஒவ்வொரு தனிநபரின் தனித்துவம், அடையாளம், உள்ளடக்கம் மற்றும் சமூக பங்கேற்பை கொண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘The Unlabelled Runway 2026’ என்ற சமூக நோக்குடைய ஃபேஷன் நிகழ்வின் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (2 செப்டெம்பர்) Cinnamon Lakeside Colombo இல் நடைபெற்றது. 

Caroline J Global Holdings நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் The Unlabelled Runway நிகழ்வின் இரண்டாவது பதிப்பு, பாரம்பரிய ஃபேஷன் நிகழ்வுகளின் வரையறைகளைத் தாண்டி, ஃபேஷனையும் தனிப்பட்ட அனுபவங்களையும் ஒன்றிணைத்து, சமூக பிரதிநிதித்துவம், தன்னம்பிக்கை மற்றும் சமூக தாக்கத்தை வலுப்படுத்தும் தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த தனித்துவமான ஃபேஷன் நிகழ்வில் தொழில்முறை மொடல்கள், ஃபேஷன் வடிவமைப்பாளர்கள், துறைசார் முன்னோடிகள், இளைஞர்கள், பெற்றோர் பராமரிப்பை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே மேடையில் ஒன்றிணையவுள்ளனர். 

சமூகத்தில் தனிநபர்களின் திறமைகள் மற்றும் பெறுமதிகளை வரையறுக்கும் முன்மதிப்பீடுகள் மற்றும் “லேபல்கள்” (Labels) ஆகியவற்றை சவாலுக்கு உட்படுத்தி, ஒவ்வொருவருக்கும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்குமான வாய்ப்பை உருவாக்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். 

SOS Children’s Villages Sri Lanka, Indira Cancer Trust, Child Action Lanka மற்றும் Roshan Mahanama Trust ஆகிய அமைப்புகளுடன் இணைந்து The Unlabelled Runway 2026 முன்னெடுக்கப்படுகிறது. வாய்ப்புகளை உருவாக்குதல், பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் என்ற பொதுவான நோக்கத்துடன் இந்த அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன. 

Caroline J Global Holdings நிறுவனத்தின் நிறுவுனரும் தலைவருமான Caroline Jurie, இந்த முயற்சியின் நோக்கம் ஒவ்வொரு தனிநபரும் தங்களது அடையாளத்தை பெருமையுடன் ஏற்றுக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் தங்களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவதாகும் என தெரிவித்தார். 

“ஃபேஷன் என்பது வெறுமனே வெளிப்புற அழகை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் அதிகமான சக்தி கொண்டது. அது தனிநபர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கவும், அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கவும், முக்கியமான சமூக உரையாடல்களை ஆரம்பிக்கவும் உதவும். சமூகத்தினால் தனிநபர்கள் மீது சுமத்தப்படும் வரையறுக்கப்பட்ட ‘லேபல்கள்’ அகற்றப்பட்டு, ஒவ்வொருவரும் பார்க்கப்படவும், மதிக்கப்படவும், ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும் என்பதே The Unlabelled Runway இன் பிரதான நோக்கமாகும்,” என அவர் தெரிவித்தார். 

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிகழ்வின் ஒரு முக்கிய அம்சமாக, மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘Pink Runway’ என்ற விசேட அங்கமும் இடம்பெறவுள்ளது. இப்பகுதி மூலம், புற்றுநோயை எதிர்கொண்டுள்ளவர்களின் துணிவு, மனவலிமை மற்றும் போராட்ட உணர்வு கௌரவிக்கப்படவுள்ளது. இதில் பிரபலங்கள், தொழில்முறை மொடல்கள் மற்றும் இக்காரணத்துடன் தொடர்புடையவர்கள் பங்கேற்கவுள்ளனர். 

மேலும், இலங்கை மற்றும் சர்வதேச ஃபேஷன் வடிவமைப்பாளர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, உள்ளூர் மற்றும் சர்வதேச படைப்பாற்றல், வடிவமைப்பு சிந்தனைகள் மற்றும் கலாசார அனுபவங்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான ஃபேஷன் அனுபவமாக அமையவுள்ளது. 

‘The Unlabelled Runway 2026’ நிகழ்வு 2026 செப்டெம்பர் 25ஆம் திகதி Cinnamon Lakeside Colombo இல் நடைபெறவுள்ளது. இதில் VIP வரவேற்பு நிகழ்வு, பிரதான ஃபேஷன் ரன்வே நிகழ்ச்சி மற்றும் துறைசார் முன்னோடிகள், விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் இணையும் cocktail networking அனுபவம் ஆகியவை இடம்பெறும். நிகழ்விற்கான அனுமதி சீட்டுகளை PickMe App இன் PickMe Explore தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்புடன் இணைந்து Caroline J Global Holdings நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேஷன், அழகுக்கலை, திறமை முகாமைத்துவம், நிகழ்வு ஏற்பாடு மற்றும் சமூக நோக்குடைய முயற்சிகள் உள்ளிட்ட நிறுவனத்தின் முக்கிய செயற்பாடுகள் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்தும் பிரத்யேக டிஜிட்டல் தளமாக இந்த இணையத்தளம் செயல்படும். 

ஊடகவியலாளர்கள், நிறுவனத் தலைவர்கள், ஃபேஷன் வடிவமைப்பாளர்கள், பிரபலங்கள், influencers மற்றும் துறைசார் முன்னோடிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பு, The Unlabelled Runway 2026 இன் நோக்கம் மற்றும் சமூக தாக்கத்தை வெளிப்படுத்தும் முக்கியமான தொடக்க நிகழ்வாக அமைந்தது. 

ஃபேஷனையும் சமூக நோக்கத்தையும் ஒரே மேடையில் இணைக்கும் The Unlabelled Runway 2026, ஒவ்வொரு தனிநபரும் தங்களது திறமைகள், கதைகள் மற்றும் கனவுகளுடன் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் ஒரு அர்த்தமுள்ள தளமாக அமையவுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

Mobitel 1278