Oct 22, 2026 - 09:41 PM

சீனாவின் தென்மேற்குப் பகுதியான திபெத்தில் 7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 10:33 அளவில் (1433 GMT) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டுள்ளதா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
வடக்கு திபெத்தின் நக்சு (Nagqu) பகுதியில் உள்ள உயரமான மாவட்டத்திலேயே இந்த நிலநடுக்கத்தின் மையம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது 10 கிலோமீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு சீனாவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.
































