Oct 22, 2026 - 08:25 PM

திருகோணமலையில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த ஒருவருக்கு இன்று (22) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி தோப்பூர், பாலத்தடிச்சேனை பிரதேசத்தில் 35 வயதுடைய கைலாசப்பிள்ளை வினோதரன், தமது தந்தையான 59 வயதுடைய முருகுப்பிள்ளை கைலாசப்பிள்ளை என்பவரை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் இவருக்கு எதிராக மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததுடன் பின்னர் 2024 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் இனங் காணப்பட்டதையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
































