Header Logo
SLIC
வணிகம்
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக 'Superbrands 2025' விருதை வென்று Samsung Sri Lanka சாதனை

Sep 3, 2026 - 04:13 PM

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக 'Superbrands 2025' விருதை வென்று Samsung Sri Lanka சாதனை
Mobitel Inner 1278
EDEX Inner

புத்தாக்கம், தரம் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் கட்டியெழுப்பியுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் இலங்கை வீடுகளில் தனக்கென வலுவான இடத்தைப் பிடித்துள்ள Samsung ஸ்ரீலங்கா நிறுவனம், சுப்பர்பிராண்ட்ஸ் ஸ்ரீலங்காஸ் சோய்ஸ் 2025 (Superbrands Sri Lanka’s Choice 2025) விருது வழங்கும் விழாவில் வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

இந்த அங்கீகாரமானது, Samsung நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கையாளருடன் கட்டியெழுப்பியுள்ள வலுவான உறவையும், அன்றாட வாழ்க்கைக்கு நடைமுறைச் சாத்தியமான தொழில்நுட்பங்களை வழங்கும் அதன் தொடர்ச்சியான முயற்சியையும் பிரதிபலிக்கிறது. வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைக்காட்சிகள் முதல் இணைப்புச் சாதனங்கள் வரை, வாடிக்கையாளரின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப Samsung தன் தயாரிப்புகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது. 

வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பையும் ஆழமான பிணைப்பையும் ஏற்படுத்தியுள்ள சிறந்த வர்த்தக நாமங்களைக் கண்டறிந்து சுப்பர்பிராண்ட்ஸ் திட்டம் கௌரவிக்கிறது. அந்த வகையில், சந்தை ஆராய்ச்சி, வாடிக்கையாளர் கருத்துகள் மற்றும் சுயாதீன நிபுணர் குழுவின் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சுப்பர்பிராண்ட்ஸ் அங்கீகாரம் Samsung நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

Samsung ஸ்ரீலங்கா நிறுவனத்தைப் பொறுத்தவரை, சுப்பர்பிராண்ட்ஸ் ஸ்ரீலங்காஸ் சோய்ஸ் 2025 விருது ஒரு கௌரவம் மட்டுமே அல்ல. அது, வாடிக்கையாளர் அந்நிறுவனத்தின் மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையையும், அவர்களின் வீடுகளில் Samsung தொழில்நுட்பம் வகிக்கும் முக்கிய பங்கையும் உணர்த்தும் ஒரு உன்னத அங்கீகாரமாகும். 

இந்தச் சாதனை குறித்து Samsung ஸ்ரீலங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சங்ஹ்வா சோங் கருத்துத் தெரிவிக்கையில், “சுப்பர்பிராண்ட் அங்கீகாரத்தைப் பெறுவது Samsung நிறுவனத்திற்கு உண்மையிலேயே பெருமிதம் அளிக்கும் ஒரு தருணமாகும். எங்களைப் பொறுத்தவரை, இந்த விருது ஒரு பட்டத்தை விட மேலானது. வாடிக்கையாளருடன் பல ஆண்டுகளாக நாங்கள் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை, விசுவாசம் மற்றும் பிணைப்பை இது பிரதிபலிக்கிறது. அதை நாங்கள் மிகவும் மதிப்புகிறோம். என்று குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், “Samsung இல், புதுமையான கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்க்கையை சிறந்ததாகவும், எளிமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். தொலைக்காட்சிகள், மொபைல் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது இணைப்புச் சாதனங்கள் எதுவாக இருந்தாலும், மக்கள் விரும்பும் மற்றும் அன்றாடம் நம்பியிருக்கும் தொழில்நுட்பத்தை வழங்குவதிலேயே நாங்கள் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறோம். மக்களிடமிருந்தே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதுதான் இதனை மேலும் சிறப்புடையதாக்குகிறது. வாடிக்கையாளரின் மாறிவரும் வாழ்க்கை முறைக்கும் தேவைகளுக்கும் ஏற்ப Samsung தொடர்ந்து தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு வர்த்தக நாமமாக திகழ்கிறது என்பதை இது காட்டுகிறது. எமது வாடிக்கையாளர்கள், வணிக பங்காளிகள் மற்றும் திரைக்குப் பின்னால் தினமும் தீவிரமாகப் பணியாற்றும் அர்ப்பணிப்புமிக்க எமது குழுவினரின் தொடர்ச்சியான ஆதரவு இல்லாமல் இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கியிருக்க முடியாது. இந்த உருக்கமான பயணத்தில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார். 

நவீன வீடுகளின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளுடன் Samsung தனது வீட்டு உபயோகப் பொருட்களின் வரிசையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பிற வீட்டு உபயோக சாதனங்கள் போன்றவை அன்றாட வீட்டு வேலைகளை எளிதாக்கும் பயன்பாட்டு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையும் Samsung வழங்கும் அனுபவத்தில் முக்கிய அங்கமாக உருவெடுத்து வருகிறது. ஸ்மார்ட் திங்க்ஸ் செயலி வாயிலாக, அதற்குப் பொருந்தக்கூடிய வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை ஒரே தளத்தின் மூலம் எளிதாக இணைத்து நிர்வகிக்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர் தங்களது சாதனங்களைக் கண்காணிக்கவும், தொலைவிலிருந்தே இயக்கிச் செயல்படுத்தவும், அன்றாட வேலைகளைத் தானியக்கமாக்கவும் முடிவதுடன், வீட்டிற்குள் ஒரு தடையற்ற, சொகுசான வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது. 

புத்தாக்கத்துடன் சேர்த்து, நம்பகத்தன்மைக்கும் Samsung முன்னுரிமை அளிக்கிறது. டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார்கள் மற்றும் கம்ப்ரஸர்களுக்கு (Compressors) வழங்கப்படும் 10 ஆண்டு கால உத்தரவாதம், வீட்டு உபயோகப் பொருட்களின் ஆயுள் மற்றும் நீண்டகால செயல்திறன் மீதான Samsung நிறுவனத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், வாடிக்கையாளர் தங்களது வீடுகளுக்காகச் செய்யும் முதலீட்டுக்கு இதுவொரு கூடுதல் பாதுகாப்பையும் மனநிறைவையும் அளிக்கிறது. 

“எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்போது, இந்த அங்கீகாரம் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் எல்லைகளைத் தாண்டிச் செயல்படவும், வாடிக்கையாளருக்கு மேலும் சிறந்த, ஒருங்கிணைந்த ஸ்மார்ட் அனுபவங்களை வழங்கிடவும் இது எங்களை ஊக்குவிக்கிறது. Samsung நிறுவனத்தில், நாங்கள் இன்றைய தினத்திற்கான தொழில்நுட்பத்தை மட்டும் உருவாக்கவில்லை. மாறாக மனிதர்கள் வாழும், பணியாற்றும் மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ளும் எதிர்கால வாழ்க்கை முறையையே வடிமைக்கிறோம்,” எனக் கூறினார். 

இலங்கையில் Samsung நிறுவனம் தனது வாடிக்கையாளர் இலத்திரனியல் சாதனங்களின் சந்தையைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் சூழலிலேயே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகளவில், தொடர்ந்து 20 ஆண்டுகளாக முதன்மைத் தொலைக்காட்சி உற்பத்தியாளர் என்ற தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள Samsung, தனது அதிநவீன Crystal UHD, Neo QLED மற்றும் The Frame தொலைக்காட்சி வரிசைகளை இலங்கை வாடிக்கையாளருக்கும் வழங்கி வருகிறது. 

Samsung நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை என்பது வெறும் தயாரிப்புகளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. சிங்கர், சிங்ககிரி, தம்ரோ மற்றும் சாஃப்ட்லொஜிக் போன்ற நாட்டின் முன்னணி விற்பனைப் பங்காளிகளை உள்ளடக்கமாகக் கொண்ட அதன் விரிவான விற்பனை மற்றும் சேவை வலையமைப்பு, நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளருக்கு Samsung தயாரிப்புகளையும், விற்பனைக்குப் பிந்தைய சிறந்த சேவைகளையும் சுலபமாகக் கொண்டு சேர்ப்பதை உறுதிசெய்கிறது. 

மேலும், முன்னணி வங்கிகளுடனான கூட்டாண்மை மூலம் வழங்கப்படும் நெகிழ்வான தவணைக்கட்டண வசதிகள், அதிநவீன Samsung தொழில்நுட்பத்தை அனைத்து இலங்கை வாடிக்கையாளருக்கும் எளிதில் கிடைக்கச் செய்கின்றன. உலகளாவிய புத்தாக்கம், உள்ளூர் விற்பனை வசதி மற்றும் தொடர்ச்சியான வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவை Samsung ஐ சந்தையுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவியுள்ளன. இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு சுப்பர்பிராண்ட்ஸ் கௌரவிப்பு விழா நடைபெற்றது. இதில் Samsung ஸ்ரீலங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் வாடிக்கையாளர் மின்னணுவியல் பிரிவின் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு, பிற முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் வணிகத் தலைவர்களுடன் இணைந்து இந்த மகத்தான சாதனையை விமரிசையாகக் கொண்டாடினர். 

Samsung ஸ்ரீலங்காவிற்கு, Superbrands Sri Lanka’s Choice 2025 விருது என்பது வாடிக்கையாளர் வைத்த நம்பிக்கையின் கொண்டாட்டமாகவும், தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கான ஊக்கமாகவும் அமைந்துள்ளது. அன்றாட வாழ்க்கையோடு தொழில்நுட்பம் மேலும் நெருக்கமாகி வரும் சூழலில், Samsung நிறுவனம் தரமான மற்றும் புத்தாக்க அனுபவங்களை மக்களுக்குத் தொடர்ந்து வழங்க உறுதியளிக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

Mobitel 1278