Sep 4, 2026 - 08:20 AM

பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு கைது செய்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் நேற்று (03) மதியம் கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்து, பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்திருந்த நிலையிலேயே இந்தச் செயலைச் செய்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.



























