Sep 4, 2026 - 02:06 PM

நேபாளத்தில் வெள்ளம் நகரங்களைச் சூறையாடி, கிராமங்களை அடித்துச் சென்ற 9 நாட்களுக்குப் பிறகு, திரிசூலி 3A கட்டுமானத் தளத்தின் நீர்மின் சுரங்கப்பாதையில் இருந்து இரண்டு தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் இன்று (04) உயிருடன் மீட்டெடுத்தனர்.
மீட்கப்பட்ட இருவரும் இயந்திர மேலாளர் மற்றும் இயந்திர மேற்பார்வையாளர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். சுரங்கப்பாதைக்குள் இருந்து குரல்கள் கேட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர்.
அவர்கள் இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக கத்மாண்டுவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பலர் சுரங்கப்பாதைக்குள் உயிருடன் இருப்பதாக மீட்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் அனர்த்த முகாமைத்துய முகமையின் தகவலின்படி, ஓகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை குறைந்தது 1,259 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.



























