Sep 4, 2026 - 02:46 PM

“சொகுசு” (luxury) என்ற சொல் தகுதிக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு நகரில், அந்த சொல்லின் உண்மையான அர்த்தம் என்னவென்பதை வெளிப்படுத்த கொழும்பு 08 இல் அமைந்துள்ள The Seasons தயாராகிறது. நவீன ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடியான Prime Lands Residencies PLC நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் The Seasons, வெளிப்படைத்தன்மை, உரிய காலத்தில் பணிகளை முடித்தல் மற்றும் நாடு முழுவதும் நிலையான தரம் போன்ற Prime Group இன், 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செம்மைப்படுத்திய கட்டுப்பாட்டுடன், கொழும்பின் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட முகவரிகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
கொழும்பின் நேர்த்தியான மற்றும் தனித்துவமான வாழ்க்கைமுறைக்கு ஏற்ற வகையில் The Seasons திகழ்கிறது. சராசரியாக 2,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இதன் மூன்று படுக்கையறைகள் கொண்ட ultra-luxury குடியிருப்புகள், மிகவும் விசாலமானவை என்பதோடு, மிக நுணுக்கமான இரசனை கொண்ட வீட்டு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, அதற்கு அப்பால் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு 08 இல் சந்திரலேகா மாவத்தையில் அமைந்துள்ள இந்தத் தொகுதி, உயர்தர வாழ்க்கைமுறைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் தனிநபர் தனியுரிமை மற்றும் வசதிகளுடன், நகரத்தின் மிகவும் விரும்பத்தக்க முகவரிகளில் ஒன்றில் வசிக்கும் வாய்ப்பை குடியிருப்பாளர்களுக்கு வழங்குகிறது. முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, கொழும்பின் சொகுசு ரியல் எஸ்டேட் துறையில் சிறந்த இருப்பிடம் மற்றும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட இத்திட்டம் தொடர்ந்து வலுவான ஈர்ப்பைக் கொண்டுள்ள ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பைக் குறிக்கிறது.
44 சொகுசு குடியிருப்புகளை மட்டும் கொண்டுள்ள The Seasons, Prime Residencies இன் The One Collection வரிசையில் இணையும் சமீபத்திய திட்டமாகும். இது தனிநபர் தனியுரிமை, ஆடம்பரமற்ற சொகுசு மற்றும் நோக்கம் கொண்ட வாழ்க்கை முறையை விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இக்குடியிருப்புகள் ரூ. 132 மில்லியனிலிருந்து ஆரம்பமாகின்றன. மேலும் இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளன.
இக்குடியிருப்புகளின் ஒவ்வொரு நுட்பமான விவரமும் தரத்திற்கான Prime Group இன் மாறாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. உலகளவில் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் கட்டடப் பொருள் உற்பத்தியாளர்களில் ஒன்றான Lesso போன்ற சர்வதேசப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களிடமிருந்து பெறப்பட்ட உயர்தரக் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் முதல், குளியலறை வடிவமைப்பில் உலகின் முன்னணி வர்த்தக நாமங்களின் சொகுசான சுகாதார கழிவறை சாதனங்கள் வரை அனைத்து அம்சங்களிலும் சிறந்த நேர்த்தியும் நுணுக்கமான கைவினைத்திறனும் நிறைந்துள்ளன. அத்துடன், சமையலறைகளும் பயன்பாட்டிற்கு எளிதாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் வகையில் உயர்தர அலுமாரிகள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட சாதனங்களுடன் மிகவும் சிந்தித்து முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நூற்றாண்டு காலப் பாரம்பரியத்தைக் கொண்ட முன்னணி குளியலறைத் தீர்வுகளின் வர்த்தக நாமமான Roca நிறுவனத்தின் உயர்தர சாதனங்களைக் கொண்டு குளியலறைகள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புதுமை, தரமான கைவினைத்திறன் மற்றும் நிலையான வடிவமைப்புக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற Roca, நவீன அழகியலையும் செயல்பாட்டுச் சிறப்பையும் ஒன்றாக இணைக்கிறது. கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட்ட இந்த சாதனங்கள், ஒவ்வொரு குடியிருப்புக்கும் காலத்தால் அழியாத நேர்த்தியையும் நம்பகத்தன்மையையும் சேர்ப்பதோடு, அன்றாட வாழ்க்கை அனுபவத்தையும் மேம்படுத்துகின்றன.
ஒரு பிரத்தியேக பயன்பாட்டு அறை சலவைப் பணிகள் மற்றும் பணியாளர்களுக்கான தங்குமிட வசதிக்கு ஏற்றவாறு நன்கு திட்டமிடப்பட்ட இடத்தினை அளித்து, ஒவ்வொரு வீட்டின் பயன்பாட்டையும் மேலும் அதிகரிக்கிறது. மேலும், இலங்கையில் முதன்முறையாக, The Seasons குடியிருப்புகளுக்குள் பிரத்தியேக களஞ்சியப் பகுதிகளை அறிமுகப்படுத்துகிறது. இது அன்றாடம் தேவைப்படாத பொருட்கள் மற்றும் பருவகாலப் பொருட்களைப் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு வசதியான தீர்வை வழங்குகிறது. இதனால் அவர்களின் வாழும் இடம் எப்போதும் நேர்த்தியாகவும், விசாலமாகவும், ஒழுங்காகவும் இருக்க உதவுகிறது.
ஒவ்வொரு குடியிருப்பும், உலகின் மிகவும் மதிப்புமிக்க வீடுகள், சொகுசு ஹோட்டல்கள் மற்றும் வணிகக் கட்டடங்களில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லைட்டிங் மற்றும் ஷேடிங் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட முன்னோடியான Lutron இன் அதிநவீன ஸ்மார்ட் ஹோம் தானியங்கித் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இவ்அமைப்பானது குடியிருப்பாளர்கள் வெளிச்சம், வெப்பநிலை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட வீட்டு செயல்பாடுகளைத் தடையின்றி கட்டுப்படுத்த அனுமதிப்பதுடன், அதிநவீன மற்றும் எளிமையான அனுபவத்தை வழங்கி சௌகரியம், வசதி மற்றும் வலு வினைத்திறனை மேம்படுத்தும் சூழலை உருவாக்குகிறது. இந்த ஸ்மார்ட் ஹோம் சூழலுக்கு மேலும் வலுவூட்டும் வகையில், பிரதான நுழைவு வாயில்கள் ஸ்மார்ட் கதவு பூட்டுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இவை நவீன அணுகல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு, வசதி மற்றும் மன அமைதியை வழங்குகின்றன.
குடியிருப்புகளுக்கு அப்பால், The Seasons இல் அன்றாட வாழ்க்கை முறையை மேலும் உயர்த்தும் வகையில் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட பல நவீன வசதிகளை வழங்குகிறது. குடியிருப்பாளர்கள் பயன்பெறும் வகையில் இதில் மூன்று வெவ்வேறு நீச்சல் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பிரதான நீச்சல் தடாகம், குழந்தைகளுக்கான நீச்சல் தடாகம் மற்றும் மனதிற்கு அமைதி தரும் அலை வடிவ நீச்சல் தடாகம் (wave pool) ஆகியவற்றுடன், executive base, karaoke room மற்றும் முழுமையாக உபகரணங்கள் பொருத்தப்பட்ட gymnasium ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பொழுதுபோக்கு, ஆரோக்கியம் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பதற்கான ஒரு சிறந்த சூழலை உருவாக்குகின்றன.
ஒன்றாக நோக்குகையில், இந்த அனைத்து அம்சங்களும் ஒரு ultra-luxury வாழ்க்கை முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான தெளிவான தொலைநோக்கைப் பிரதிபலிக்கின்றன. விசாலமான, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட, அமைதியான அறிவார்ந்த தொழில்நுட்பம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, தனிநபர் தனியுரிமை. கொழும்பு 08 இல் அமைந்துள்ள The Seasons, தரம், வசதி மற்றும் நேர்த்தியான நகர வாழ்க்கை முறைக்கான Prime Residencies இன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு விதிவிலக்கான உயர்தர வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் நோக்குடன் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.



























