Sep 4, 2026 - 10:01 PM

பொரலஸ்கமுவ , மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவராவார்.
துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























