Sep 5, 2026 - 09:51 PM

பொரலஸ்கமுவையில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை மகரகம பொலிஸார் மீட்டுள்ளனர்.
பன்னிப்பிட்டிய - மஹல்வராவ பகுதியில் உள்ள விகாரையொன்றுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் இன்று (05) இந்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.
மகரகம பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே பொலிஸார் இந்த மோட்டார் சைக்கிளைக் கண்டறிந்துள்ளனர்.
நேற்று (04) இரவு பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கல மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
74 வயதான குறித்த நபர் வீட்டில் இருந்தவேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 'கொஸ் மல்லி' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் காசாளராக பணியாற்றியவர் என்பதும் பொலிஸாரால் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



























