Header Logo
Vallibel FD
செய்திகள்
ஐ.நா. மனித உரிமை அறிக்கையை வரவேற்கும் தமிழரசுக் கட்சி

Sep 8, 2026 - 04:39 PM

ஐ.நா. மனித உரிமை அறிக்கையை வரவேற்கும் தமிழரசுக் கட்சி
Mobitel Inner 1278

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையை வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ம. ஆ. சுமந்திரன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், யுத்தகால குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமின்மை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இராணுவத்தினரின் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பான கரிசனைகளை ஐ.நா. சுட்டிக்காட்டியமை வரவேற்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பதை ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதையும் தமிழரசு கட்சி அவதானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கம் இலஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருள் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய அரசு பதவிக்கு வந்து இரண்டு வருடங்களாகியும் புதிய அரசியலமைப்பு தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதில் அரசாங்கம் காட்டிவரும் இந்த மந்தபோக்கால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழரசுக் கட்சி தெரிவிப்பதாகக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
04
இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

Sep 8, 2026 - 04:30 PM

காணொளி
எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

Mobitel 1278