Header Logo
Vallibel FD
வணிகம்
பேபி செரமி தனது Funtime Cologne தயாரிப்பு வரிசையைப் புதுப்பித்து, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் விதமாக, Cheramy World திட்டத்தை அறிமுகப்படுத்துகி

Sep 8, 2026 - 03:42 PM

பேபி செரமி தனது Funtime Cologne தயாரிப்பு வரிசையைப் புதுப்பித்து, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் விதமாக, Cheramy World திட்டத்தை அறிமுகப்படுத்துகி
Mobitel Inner 1278

இலங்கையின் நம்பர் 1 குழந்தைகள் பராமரிப்பு நாமமான பேபி செரமி, தனது வர்த்தகநாமத்தின் பயணத்தில் ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், குழந்தைகளுக்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதல் கல்வி மற்றும் பொழுதுபோக்கு உலகமான Cheramy World திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விளையாட்டு, கற்பனை மற்றும் கற்றல் மூலம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட Cheramy World, பேபி செரமி Funtime Cologne தயாரிப்பு வரிசையின் புதுப்பித்தலுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, சுறுசுறுப்பான குழந்தைகளின் அன்றாட சாகசங்களுக்காக வடிவமைக்கப்பட்ட புத்துணர்ச்சியான நறுமணங்களுடன், Funtime Buddies எனப்படும் அன்பான கதாபாத்திரங்களான Lucky Ducky, Cuddly Bunny, Angel Fairy, Star Dust, மற்றும் Magic Mist ஆகிய முற்றிலும் புதிய கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கிறது. 

ஒரு தயாரிப்பின் புதுப்பித்தலைத் தாண்டி, நம்பகமான குழந்தை பராமரிப்புக்கு அப்பாற்பட்ட அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்கும் பேபி செரமியின் தூரநோக்குடனான இலட்சியத்தை Cheramy World பிரதிபலிக்கிறது. இது ஒரு மாயாஜால உலகம். இங்கு, ஈர்க்கும் கதைகள், கற்பனை விளையாட்டுகள் மற்றும் மறக்க முடியாத அனுபவங்கள் மூலம் குழந்தைகள் தேடல்களுடன் ஆராயவும், கண்டறியவும், முக்கியமான வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதே சமயம், குழந்தைகளின் வளர்ச்சிப் பருவத்தின் வெவ்வேறு கட்டங்களில் பெற்றோர்களுக்கு இது ஒரு நம்பகமான துணையாகவும் அமைகிறது. 

Cheramy World திட்டத்தின் மையத்தில் Funtime Buddies உள்ளன. இவை, பேபி செரமியின் மிகவும் விரும்பப்படும் தனித்துவமான கதாபாத்திர உலகத்தை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகளின் கற்றல் மற்றும் வளர்ச்சியின் வெவ்வேறு பரிமாணங்களை உயிர்ப்பிக்கும் புதிய ஆளுமைகளை அறிமுகப்படுத்துகின்றன. ஒவ்வொரு Buddy-க்கும் Cheramy World இல் ஒரு தனித்துவமான ஆளுமையும் பங்கும் உண்டு: Lucky Ducky இசை மற்றும் பாடுவதற்கு ஊக்கமளிக்கிறது, Cuddly Bunny நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கிறது, Angel Fairy எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கற்பதை மகிழ்ச்சியாக ஆக்குகிறது, Magic Mist விளையாட்டு மனப்பான்மையையும் குழுப்பணியையும் ஊக்குவிக்கிறது, அதே சமயம் Stardust கற்பனையையும் தேடலையும் தூண்டுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து, கற்றலும் வேடிக்கையும் கைகோர்த்துச் செல்லும் ஒரு ஈர்க்கக்கூடிய உலகத்தை உருவாக்குகின்றன. இது, குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கிறது. 

Cheramy World அனுபவம் தற்போது டிஜிட்டல் உள்ளடக்கம் மூலம் உயிர்ப்பிக்கப்படுகிறது. மேலும், செயல்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் நாடு முழுவதும் வர்த்தகநாமத்தின் தலைமையிலான செயல்பாடுகள் மூலம் இந்தத் தளத்தை டிஜிட்டல் வெளிக்கு அப்பால் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது, குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த Funtime Buddies உடன் ஈடுபடவும், கற்கவும், விளையாடவும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும். 

Cheramy World-இன் அறிமுகத்துடன் இணைந்து, பேபி செரமி தனது Funtime Cologne தயாரிப்பு வரிசையையும் மேம்படுத்தியுள்ளது. சுறுசுறுப்பான சிறு குழந்தைகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரிசையில், Funtime Buddies கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்ட ஐந்து புதிய நறுமணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அக்குழந்தைகளின் தனித்துவமான குணாதிசயங்களை நறுமணம் மூலம் வெளிப்படுத்துகின்றன. சரும மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கப்பட்டு குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த நறுமணங்கள், சர்வதேச நறுமணச் சங்கத்தின் (International Fragrance Association - IFRA) தரநிலைகளுக்கு உட்பட்டவை. இது நம்பகமான நிபுணத்துவப் பராமரிப்பை வழங்குவதில் பேபி செரமி கொண்டுள்ள உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட வரிசையானது Joy Booster (மகிழ்ச்சியை அதிகரிக்கும்) என்ற புதிய கருத்தாக்கத்தையும் அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகளின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் சாகசங்களில் நறுமணம் கூடுதல் மகிழ்ச்சியைச் சேர்க்கும் என்ற நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. 

இந்த முக்கிய சாதனை மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக, ஹவ்லொக் சிட்டி வர்த்தகத் தொகுதியில் அமைந்துள்ள ஸ்கோப் சினிமாஸ் திரையரங்கில் PAW Patrol: The Dino Movie என்ற திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சியின் மூலம் Cheramy World உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் மிகவும் பிரபலமான குழந்தைகளுக்கான திரைப்படத் தொடர்களில் ஒன்றையும், இலங்கையின் முதன்மையான குழந்தைப் பராமரிப்பு நாமத்தையும் ஒன்றிணைத்த இந்நிகழ்வு, குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஒரு சிறப்பான அனுபவத்திற்குள் வரவேற்றது. 

Cheramy World-இன் மையமாகத் திகழும் கற்பனைத்திறன், உற்சாகம் மற்றும் சாகச உணர்வு ஆகியவற்றை இந்நிகழ்வு பிரதிபலித்தது. 

திரையரங்கில் கழித்த அந்த மதியப் பொழுதை ஒரு மறக்க முடியாத குடும்பக் கொண்டாட்டமாக மாற்றிய இந்நிகழ்வில், குழந்தைகள் முதலில் PAW Patrol-இன் புதிய சாகசத்தை இரசித்தனர்; பின்னர் செரமியின் மாயாஜால உலகிற்குள் அடியெடுத்து வைத்தனர். Funtime Buddies கதாபாத்திரங்கள், மேம்படுத்தப்பட்ட Cologne தயாரிப்பு வரிசை மற்றும் குழந்தைகள் ஒன்றிணைந்து விளையாடி, கற்றுக்கொண்டு, வளரக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்கும் பேபி செரமியின் தூரநோக்குடனான இலட்சியம் ஆகியவற்றை குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாகவும் இந்நிகழ்வு அமைந்தது. 

Hemas Consumer நிறுவனம் தொடர்பான விபரங்கள் 

இலங்கையின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் 60 ஆண்டுகளாக முன்னிலை வகிக்கும் Hemas Consumer Brands, குடும்பங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை அடைய வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. உள்ளூர் நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி, நுகர்வோரை மையமாகக் கொண்ட புதிய தயாரிப்புகளை உருவாக்கி மேம்படுத்துவதில் இந்நிறுவனம் பெருமை கொள்கிறது. இதன் மூலம், தங்களின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகநாமங்கள் இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர்களாக நிலைபெற்றுள்ளன. இலங்கை நுகர்வோரைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் மற்றும் தனது தயாரிப்புகள் மூலம் உயர்ந்த தரம் மற்றும் மதிப்பை வழங்குவதில் உள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை Hemas Consumer Brands தொடர்ந்து வளப்படுத்தி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
01
இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

Sep 8, 2026 - 04:30 PM


காணொளி
எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

Mobitel 1278