Header Logo
Vallibel FD
செய்திகள்
தனியார் துறையினருக்கு இணையவழி மூலம் ரயில் பருவச்சீட்டு

Sep 8, 2026 - 10:06 PM

தனியார் துறையினருக்கு இணையவழி மூலம் ரயில் பருவச்சீட்டு
Mobitel Inner 1278

தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கைத் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள seatreservation.railway.gov.lk இணையத்தளத்தின் ஊடாகத் தேவைக்கேற்ப மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும்.

 

இதுவரை அரச துறைக்கு மட்டுமே நடைமுறையிலிருந்த இந்த வசதியைத் தனியார் துறைக்கும் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (08) பத்தரமுல்லைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் பற்றிய பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்னவும் கலந்துகொண்டார்.

 

மாதாந்த பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும்போது இதுவரை பயணிகள் எதிர்கொண்ட சிரமங்களைக் குறைப்பதே இந்த புதிய முறையின் நோக்கமாகும். இதற்கு முன்னர் பருவச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பப் படிவம், புகைப்படம், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்ததுடன், குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட நேரத்திற்குள்ளேயே அந்தச் சேவையைப் பெற வேண்டியிருந்தது.

 

புதிய முறையின் கீழ், பயணிகளின் அடையாளமும் பயனர் கணக்கும் (User account) சரிபார்க்கப்பட்ட பின்னர், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பருவச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு, இலங்கைத் ரயில்வே திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

 

ரயில் சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பரந்த திட்டத்தின் கீழ், பயணிகளுக்கு மிகவும் திறமையான மற்றும் இலகுவான சேவையை வழங்குவதற்கான மற்றொரு கட்டமாகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

தற்போது களனிவெலி ரயில் பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில் நிலையங்களை மையப்படுத்தி ஸ்மார்ட் டிக்கெட் (Smart ticket) முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், ரயில் ஆசனங்களை இணையவழியில் முன்பதிவு செய்யும் வசதிகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

Mobitel 1278