Sep 10, 2026 - 03:48 PM

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன, சுமார் மூன்று மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அவர் இன்று (10) காலை 10.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார்.
'சிரிலிய சவிய' தொடர்பான விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்திருந்தார்.





























