Sep 13, 2026 - 03:47 PM

நாடு முழுவதிலும் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட நாடு ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கையின் மூலம் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 11 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட 724 சோதனைகளின் அடிப்படையில் இந்தச் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கையின் போது 423 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 242 சோதனைகளின் மூலமே இத்தொகை கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இதற்கு மேலதிகமாக, 550 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 405 கிராம் கஞ்சா மற்றும் 2,589 கஞ்சாச் செடிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.





























