Sep 13, 2026 - 07:23 PM

தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் இன்று (13) ரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வியைப் பயின்றுள்ள ரோஷ் ஜலகே, தற்போது அவுஸ்திரேலியாவில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பல தொழில்களைச் நடத்தி வரும் ஓர் இலங்கை பில்லியனர் ஆவார்.
இவர் இலங்கைக்கு வருகை தந்த 'கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-5' (Gulfstream G-V) விமானமானது ஒரே தடவையில் 12,000 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
இலங்கையின் முதலாவது தனியார் விமானமாக 1980 ஆம் ஆண்டுகளில் உப்பாலி விஜேவர்தனவினால் கொள்வனவு செய்யப்பட்ட 'லியர்ஜெட் 35ஏ' (Learjet 35A) விமானத்தால் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பறக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.





























