Sep 14, 2026 - 02:35 PM

மேல் மாகாணத்திற்கு வெளியே தனது உயர்தர சில்லறை விற்பனை இருப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் (CEAT Kelani Holdings) தனது புதிய Shop-In-Shop (SIS) விற்பனை நிலையமான Sumidag Prime ஐ குருநாகல், நீர்கொழும்பு வீதியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் உயர்தர டயர் தீர்வுகள் மற்றும் தொழில்முறை வாகன சேவைகளை இப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்த்துள்ளது.
மல்கடுவாவவில் உள்ள வெலகெதர கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள இது, இலங்கையில் சியெட் நிறுவனத்தின் 14-ஆவது SIS உயர்தர சில்லறை விற்பனை நிலையமாகும். டயர் கொள்வனவு செய்தல் மற்றும் அதற்கான பராமரிப்புச் சேவை அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியானதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கருத்தாக்கத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு விழா,சியெட் களனி நிறுவனத்தின் மிக நீண்ட கால விற்பனை பங்குதாரர்களில் ஒன்றான சுமிடாக் (Sumidag) நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. 1986 ஆம் ஆண்டில் திரு. அஜித் கருணாரத்ன அவர்களால் தொடங்கப்பட்ட சுமிடாக் நிறுவனம், சியெட் டயர் வர்த்தகநாம இலங்கை சந்தையில் நுழைந்த உடனேயே அதனுடன் கைகோர்த்தது. அன்றிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு கூட்டுறவை அது கட்டியெழுப்பியுள்ளது. இந்த வர்த்தகமானது தற்போது சியெட் இன் முன்னணி விற்பனை பங்குதாரர்களில் ஒன்றாகவும், குருநாகல் பிராந்தியத்தில் சியெட்டின் இருசக்கர வாகன டயர்களின் முக்கிய விநியோகஸ்தராகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
சுமிடாக் பிரைமின் தொடக்கமானது, அந்த நீண்டகால கூட்டாண்மையின் அடுத்த கட்டத்தை பிரதிபலிக்கிறது. திரு. சாமோத் கருணாரத்ன அவர்களின் தலைமையின் கீழ், கருணாரத்ன குடும்பத்தின் அடுத்த தலைமுறையினர் வளர்ச்சி, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சிறந்த தரம் ஆகியவற்றில் புதிய கவனத்துடன் இந்த வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர்.
சியெட் நிறுவனத்தின் உயர்தர Shop-In-Shop கருத்தாக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சுமிடாக் ப்ரைம் (Sumidag Prime) என்பது பாரம்பரிய பல வர்த்தகநாம விற்பனையாளர் சூழலை, ஒரு பிரத்தியேக சியெட் சில்லறை விற்பனை நிலையமாக மாற்றுகிறது. இந்த விற்பனை நிலையத்திற்கான முதலீடானது விரிவான உட்புற மற்றும் வெளிப்புற பிராண்டிங், ஒளிரும் பிராண்ட் முகப்பு, மேம்படுத்தப்பட்ட கூரை மற்றும் கண்ணாடிகள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், நவீன மரச்சாமான்கள், கவர்ச்சிகரமான டயர் காட்சி அடுக்குகள் மற்றும் ஊடாடும் வணிக தீர்வுகளை உள்ளடக்கியது. வாடிக்கையாளர்களின் வாகனங்கள் கவனிக்கப்படும்போது, அவர்களுக்கான பிரத்தியேக வாடிக்கையாளர் ஓய்வறை அவர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது.
புதிய கிளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள், குருநாகலில் கிடைக்கக்கூடிய அதிநவீன டயர் மற்றும் வாகன சக்கர சேவை தொழில்நுட்பத்துடன், பரந்த அளவிலான சியெட் டயர்களை சிறந்த விலைக்கழிவுடன் பெற்றுக்கொள்ள முடியும். இந்தச் சேவைகளில் நைட்ரஜன் மற்றும் காற்று நிரப்புதல் வீல் அலைமென்ட் (wheel alignment), வீல் பேலன்சிங் (wheel balancing), கேம்பர் அட்ஜஸ்ட்மென்ட் (camber adjustment) மற்றும் கேஸ்டர் அட்ஜஸ்ட்மென்ட் (caster adjustment), அத்துடன் அலாய் வீல்கள் (alloy wheels) மற்றும் பேட்டரிகளும் அடங்கும். வசதியான மற்றும் பாதுகாப்பான வாகன நிறுத்துமிடம் இந்த வசதியை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுகிறது.
பிராண்ட் ஃபினான்ஸினால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாகவும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டில் LMD ஆல் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாகவும் தரவரிசைப் படுத்தப்பட்ட சியெட் ஆனது, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வர்த்தகநாமமாகும், ஆண்டுதோறும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சியெட் களனியானது இலங்கையின் வாகன டயர் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்வதைத் தவிர, அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டு முயற்சியானது இலங்கையில் ரூ. 8.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்ததற்கு பிறகு, மேலும் ரூ. 4.5 பில்லியனை முதலீடு செய்தது, இதன் மூலம் நிறுவனமானது உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு நம்பகமான பங்காளியாகவும் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது.





























